பூண்டு பால்

 சித்தர்களின் பார்வையில் 

பூண்டு பால்


மூட்டு வலி

சர்க்கரை

உயர் ரத்த அழுத்தம் என்கின்ற பிரஷர்


இந்த மூன்று நோய்களுக்கும் 

ஒரே மருந்து


     பூண்டு பால் தயாரிப்பது பற்றி பலரும் பலவிதமாய் சொல்லி வருகின்றார்கள்


     இந்த செய்முறைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல்


ஒவ்வொருவரும்

வெவ்வேறு விதமாய் சொல்வது என்னவோ முற்றிலும் முரண்பாடாக இருக்கின்றது

      

  சித்தர்கள் கூட பூண்டு பால் தயாரிப்பதற்கு இத்தனை முறைகள் சொன்னதாக மருத்துவ நூல்களில் இதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை


    அகஸ்தியர் பெருமான் அவர் இயற்றிய கௌமதி நூல் எனும் வைத்திய காவியத்தில் பூண்டுப்பால் தயாரிக்கும் ஒரு முறையை கூறி  வைத்துள்ளார்


      இவரைப் போலவே தேரையர் சித்தரும் அவர் இற்றிய தேரையர் வெண்பா என்ற வைத்திய நூலில் பூண்டுப்பால் செய்முறையை சொல்லி வைத்திருக்கின்றார்


       இவர்கள் இருவரும் பூண்டுபால் செய்முறையை ஒரே மாதிரிதான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


அவர்களால் சொல்லப்பட்ட 

பூண்டுபால் செய்முறை


தேவையான பொருட்கள்


உரித்த பூண்டிதழ் 6 பல்

பசும்பால் 100 மில்லி 

தண்ணீர் 100 மில்லி

பனைவெல்லம் 5 கிராம்


செய்முறை


      பசும்பால் தண்ணீர் இரண்டையும் ஒன்றாக கலந்து லேசான கொதி வரும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும்


     அப்படி கொதிக்க வைத்த பாலினை இந்த பூண்டில் கொஞ்சம் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்


     அதன் பின் அரைத்த இந்த விழுதை ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் பாலில் போட்டு நன்றாக மீண்டும் காய்ச்சி கொள்ளவேண்டும்


     இந்தப் பால் பாதியாக சுண்டியதும் ஆற வைத்து பனைவெல்லம் சேர்த்து பருகலாம்


  இதுதான் சித்தர்கள் நமக்கு அருளிய பூண்டுப்பால் செய்யும் முறையாகும்


இந்த பூண்டு பாலின் பயன்கள்


உடலில் உள்ள அனைத்து வாய்வுகளும் நீங்கிவிடும்


செரிமானக் கோளாறுகள் நீங்கும்

இதனால் சர்க்கரை நோய் குறையும்


உடலில் சூடு குறையும்

இதனால் பித்தம் சமநிலைப்படும்


 உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு அற்புதமான மருந்து இது

அனுபவ உண்மை


தொண்டை சளி நீங்கும்

உடலிலுள்ள சீதளம் குணமாகும்

சிலேத்தும குணம் சமநிலைப்படும்


வாதநோய்கள் நீங்கும்

இதனால் மூட்டுவலி குணமாகும் என்று சித்தர்களே கூறியிருக்கின்றார்கள்


  இந்தப் பூண்டுப் பாலினை பருகுவதால் வாதம்  பித்தம் சிலேத்தும் எனும் முக்குணங்கள் சமமாகும் என சித்தர்களே கூறி இருப்பதால் உடலில் எந்த நோய்களும் அண்டாது இதனால் வேறு நோய்களும் உடலில் தோன்றாது என்பது உறுதி


சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை

ஒரு பொருளோடு இன்னொரு பொருளாய் எதை சேர்த்தால் எந்த வகையான நோய்களுக்கு அது மருந்தாகிறது என்பது சித்தர்களுக்கே தெரியும்


ஆக

சித்தர் காட்டிய வழியே சிறந்த வழி


நன்றி

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி