தாம்பத்தியம் பாதுகாக்க

 #தாம்பத்தியம்_கசந்தால் 

#வாழ்க்கையே_சிதைத்து_விடும்.❗❗


💚 தாம்பத்தியம் சிறப்பதற்கான வழிமுறைகள்.


💚 தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. 


💚 தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்து க் கொள்ளுங்கள்.


💚 உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவு படுத்துங்கள். 


💚 நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதை உறுதியளியுங்கள்.

துணையின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், அதை குறைகூறாதீர். உங்களின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்தவர்களையும் மரியாதை செய்யுங்கள். இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கும். 


💚 அவர்கள்முன் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டிப்பேசவேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக மிக அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


💚 நோய் மற்றும் வேறு ஏதாவது கவலையில் வாழ்க்கைத்துணை இருந்தாலும், ஆறுதல் வார்த்தை 

கூறத்தவறாதீர்கள். திருமண வாழ்வில் பிரச்சினை வராமல் தடுக்க வழிகள் சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. கல்யாண வாழ்கைக்குள் நுழைந்த பின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். 


💚திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ் கையை வாழ வழிவகுக்கும்.


💚 ஆண், பெண் இருவருக்கும் சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இதுஎல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக் காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், அதனால் எத்தகைய விபரீதங்க ள் வரும் என்பதை நன்கு உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.


💚 தன்மீது ஆண்கள் ஆசை 

கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும் படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.


💚 அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர்பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.


💚 எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவனுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.


💚 கணவன் மனைவியிடம், எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, “அவர் என் நண்பர்.” என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா❓ இல்லை அந்த நட்பு முக்கியமா❓ என்று நன்கு யோசித்து செயல் பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.


💚 எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக 

இருக்கும்.


💚 கணவருடன் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் அடுத்தவரை நுழையவிடாமல் பார்த்துக் 

கொண்டாலே பெரும்பாலான பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.


💚 தினமும் கணவன் மனைவி இருவரும் அரை மணிநேரமாவது அன்றைய தினம் நடந்தவற்றை பற்றி பேசி கொண்டால் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் உண்டாகும்.


 💚 நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர்பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்கவரும்போது, அது காதலாகமாறும். 


💚 அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, “#எப்பொழுதும்_நம்_கணவன், #நம்_குழந்தை” என்ற சிந்தனையை மனதில் கொண்டால், #வாழ்க்கையானது_சந்தோஷத்துடன் #இருக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி