அன்னரச

 #இனிய_இரவு_வணக்கம் ........


#எளிய_முறையில்_மலச்சிக்கல் 

              #தீருவதற்கான_வழிமுறைகள்.......


 மலச்சிக்கலை நீக்கினால்

உடலில் பல சிக்கல்கள் நீங்கும்


 மலச்சிக்கல் இல்லாதவர்களை நோய்கள் நாடாது , மலச்சிக்கல் உள்ளவர்களை நோய்கள் விடாது


     மலச்சிக்கலை நீக்குவதின் மூலம் அன்றாடம் உடலில் ஏற்படுகின்ற சிறு சிறு வியாதிகள்  நாம்  அறிவதற்கு முன்பாகவே அது தானாக விலகி விடும்


  மலச்சிக்கலை  நீக்குவதற்கு பெரிதாக ஒரு மருந்து தேவையில்லை இரவில் சுடு தண்ணீரில் கடுக்காய் கலந்து சாப்பிட்டால் போதும்


   தீராத மலக்கட்டுக்கு இரவில் உணவருந்திய பின்னால் கடுக்காய் பொடியும் லவங்கப் பட்டை பொடியும் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு மூன்று கிராம் அளவிற்கு குறையாமல் சுடுநீரில் கலந்து குடித்தாலே போதும் மலக்கட்டு நீங்கும்


     தினமும் காலையில் எழுந்தவுடன் டீ காபி சாப்பிடுவதை தவிர்த்து ஒரு டம்ளர் சுடுநீரில்  இரண்டு கிராம் கடுக்காய் தூள் மட்டும் கலந்து இதை அருந்தி  வந்தால் மலச்சிக்கல் எளிதில் நீங்கி விடும்

               

   நீராகாரத்தில் சிறிது விளக்கெண்ணெய் சிறிது வேப்பெண்ணெய் கலந்து குடித்து வர தீராத நாள்பட்ட மலபந்தம் தீரும் மலம் இளகி எளிதாக வெளியேறிவிடும்

   

      ஐந்து கிராம் சீரகத்தை வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி காய்ச்சி குடித்து வந்தால் இதன் பயனாக உடலில் உள்ள ராஜ உறுப்புகள் பலம்பெறும் இதனால் குடல் வலிமை பெற்று வாய்வுக் கோளாறுகள் நீங்கி உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகி தேங்கி நிற்கும் கழிவுகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு உடல் ஆரோக்கியத்தை பெறும் சீரகத் தண்ணீரை தினந்தோறும் பயன்படுத்தி வருபவருக்கு மலச்சிக்கல் வருவதில்லை


இது சாதாரண சீரகத் தண்ணீர் தானே என்று நினைக்காதீர்கள்

உடலை சீராக இயக்கும் தண்ணீர் என்று நினைவில் கொள்ளுங்கள்


அடுத்து


     பூண்டு ஐந்து பல்லும் ஐந்து கிராம் அளவிற்கு சுக்கும் இதனோடு சிறிது பனைவெல்லமும் சேர்த்து இதை கியாழமாக அதாவது அடுப்பில் இட்டு சற்று சுண்டும்படியாக காய்ச்சி குடித்து வந்தால் உடலில் இது நாள்வரை சிக்கி இருந்த  மலம் சிக்கலின்றி வெளியேறி விடும்

      


     இரவு மீதமான சாதத்தில் ஆறிய கஞ்சி கொஞ்சமும் சுடவைத்து ஆற வைத்த சுடுநீர் கொஞ்சமும்   கலந்து இதை மீதமான சாதத்தில் ஊற்றி சிறிதளவு உப்பும் இட்டு மூடி வைத்துவிட வேண்டும் இதைத்தான் நம் முன்னோர்கள்  நீராகாரம் என்றார்கள் இந்த நீரே ஆகாரத்திற்கு இணையான பலம் தரும் என்பதால் இதற்கு நீராகாரம் என்று பெயர்


(மீதமான சாப்பாட்டில் குளிர்ந்த நீரை ஊற்றி வைப்பதற்கு பேர் நீராகாரம் அல்ல)


முறையாக தயாரித்த நீராகரத்திற்கு வேறு ஒரு பெயரை முன்னோர்கள் வைத்துள்ளார்கள்


  அது என்னவென்றால் 

அன்னரச அமிர்த சஞ்சீவி ஔஷதம் என்பதாகும்


       இதற்கு இனிமேல் நாம் விளக்கம் சொல்லத் தேவையில்லை இதன் பெருமையை நீங்களேஅறிந்து இருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

     

       இந்த  அன்னரச அமிர்தத்தை உண்டு வருவோருக்கு மலச்சிக்கல் என்னும் நோய் எப்பொழுதும் ஏற்படாது என்பது உண்மையாகும்  


    வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குப்பைமேனிக் கீரையை சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்பது உடலில் ஏற்படாது இது உண்மை


                                #நன்றி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி