தந்த சூரணம்

 *தந்த சூரணம் எனும் பாலக்காடு பற்பொடி*


வேப்பம் பட்டை 

கருவேலம் பட்டை

நாவல்மர பட்டை

இவை வகைக்கு 600 கிராம் எடுத்து வெயிலில் நன்றாய் உலர்த்தி உரலில் இட்டு இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்

கடுக்காய் தோல் 150 கிராம்

கருவப்பட்டை 150 கிராம்

கிராம்பு 100 கிராம்

ஏலரிசி 75 கிராம்

அக்கிரகாரம் 75 கிராம்

படிகாரம் 75 கிராம்

இவற்றில் படிகாரத்தை தவிர மற்றதை எல்லாம் வெயிலில் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும் படிகாரத்தை பொடி செய்து சலித்து எடுத்து கொள்ளவும் 

எல்லா பொடிகளையும் ஒன்றாக கல்வத்திலிட்டு  கொஞ்சம் அரைத்து கலந்து காற்று புகாத டப்பியில் மூடி வைத்து உபயோகிக்கவும் இது கறுப்பாக இருக்கும்  *இது ஒரு உயர்ந்த பற்பொடியாகும் பல்வேறு பல் சம்பந்தமான நோய்களை நீக்கும்*



*ஒரு  பழைய நூலில் கண்டு எடுத்த முறை*



செந்தில்குமார் லண்டன்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்