விதைப்பை வலி
விதைப்பை வலியா!!!
நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் விதைப்பை வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன.
விளையாடும் போதோ, எதிர்பாராத விதமாக விபத்தின் போதோ, சண்டையின்போதோ
விதைப்பையில் அடிப்பட்டால் ஏற்படும் அந்த வலியை வார்த்தைகளில் கூறிவிட முடியாது.
ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த உயிர் போகும் வலியை உணர்ந்திருப்பார்கள்.
விதைப்பையானது சில நேரங்களில் இருமலின் போதும் வலிக்க ஆரம்பிக்கும். எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர்னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதைப்பையில் உள்ள நரம்புகள் சுருட்டு அதாவது வெரிகோஸ்வெயின் பிரச்சினை இருக்கலாம்.
அளவுக்கு அதிகமாக பைக், சைக்கில் ஓட்டுவதால் இந்த பிரச்சினை ஏற்படும். இதுபோன்று விதைப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இதற்கான எளிய தீர்வை தெரிந்து கொள்ளுவோம்
மேற்பூச்சு மருந்து
கருஞ்சீரகம் இருநூறு கிராம் எடுத்து சுத்தம் செய்து நன்கு அரைத்து தூளாக்கி
ஐநூறு மில்லி சுத்தமான செக்கு தேங்காய் எண்ணையில் போட்டு நன்கு கலந்து
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்து நல்ல வெயிலில் சூரிய ஒளி படும்படி வைக்கவும்
இவ்வாறு ஏழு நாட்கள் சூரிய வெயிலில் வைத்து சூரிய புடம் இடப்பட்ட பின்
அந்தக் கலவை கருஞ்சீரக எண்ணையாக மாறி விடும்
இந்த கருஞ்சீரக எண்ணெயை விதைகளின் மீது மேல் பூச்சு மருந்தாக தொடர்ந்து போட்டு வர
இந்த பிரச்சினைகளில் இருந்து விடு படலாம்
உள் மருந்து
விளக்கெண்ணெய் நூறு மில்லி
களற்சிக்காய் பருப்பு ........... ஐந்து கிராம்
பூண்டு ........... ஐந்து கிராம்
வேப்பிலைக் கொழுந்து........... ஐந்து கிராம்
திப்பிலி ........... ஐந்து கிராம்
ஓமம் ........... ஐந்து கிராம்
மிளகு ........... ஐந்து கிராம்
வசம்பு ........... ஐந்து கிராம்
சுக்கு ........... ஐந்து கிராம்
ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
விளக்கெண்ணையை தவிர்த்து மற்ற பொருட்களை
கொடுக்கப் பட்டுள்ள அளவின் படி எடுத்து
நன்கு இடித்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணையை ஊற்றி
மிதமான சூட்டில் காய்ச்சி
காய்ந்து கொண்டு இருக்கும் விளக்கெண்ணையில்
இடித்து அரைத்து வைத்துள்ள மருந்துப் பொருட்களைப் போட்டு
சிறு தீயில் நன்கு பதமாக தைலமாகக் காய்ச்சவும்
தைலப் பதம் வந்த உடன்
இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் இந்த தைலத்தை
இறக்கி வடி கட்டி ஆறவைத்து
கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்
தொடர்ந்து தினமும் காலை உணவுக்குப் பின்
இந்த தைலத்தில் ஐந்து மில்லி எடுத்து குடித்து வர
விதை வீக்கம் படிப்படியாக குணமாகி வரும்
விதைப் பையில் ஏற்பட்ட பல நோய்களும் நீங்கி விடும்
முழுவதும் குணமான பின் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்
இந்த எளிய அனுபவ மருந்துகளைப் பயன் படுத்தி
விதைப் பை பிரச்சினைகளில் இருந்து விடு பட்டு நலமுடன் வாழலாம்
அருமை
ReplyDelete