மலர் மருத்துவம் அறிமுகம்

 பொதுவான #மலர்மருத்துவ கேள்வி பதில்!


1) யார் யார் மலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்? யார் யார் எடுத்துக் கொள்ளக் கூடாது?

பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரும் அவரவரிடம் அமைந்துள்ள எதிர்மறை இயல்புகளுக்கேற்ப மலர்மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்தவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் யாருக்கும் கிடையாது.


2) #மலர்மருந்துகள் சாப்பிடும் போது காபி, புகை, மது குடித்தல் எதிர்மறையான மோசமான விளைவுகள் ஏற்படுமா?

மலர் மருந்துகளுக்கு எதிர்மறை இயல்புகளை மாற்றும் ஆற்றல்தான் உண்டே தவிர எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. மலர் மருந்தில் எந்த விதமான நச்சுத் தன்மையோ, கேடான தன்டையோ கிடையாது.


3) மலர் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதனையே சார்ந்து கிடக்கும் நிலை/பழக்க அடிமைத்தனம் (Habit Forming) ஏற்பட்டு விடுமா?

மலர் மருந்துகளில் பௌதீக வடிவிலான மருந்துப்பொருள் (Physical Substance) எதுவும் இல்லை. மனச்சமநிலையை ஏற்படுத்தவே மலர் மருந்து உண்கிறோம். அத்தகைய மனச்சமநிலை (மன ஆரோக்கியம்) கிடைத்த பின்னர் மலர் மருந்துகளுக்கு வேலை ஏதுமில்லை. அதன் காரணமாக மருந்து சாப்பிடும் தேவையும் இருக்காது ஆர்வமும் குறைந்து.. மறைந்து போகும். மலர் மருந்தை இயல்பாகவே மறந்துவிட நேரிடும். எனவே மனோரீதியில் மலர்மருந்துகளுக்கு அடிமையாகி அதனை விட்டு விலக முடியாதநிலை ஏற்பட சாத்தியமே இல்லை.


4) உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனநிலைகளும் 38 மலர் மருந்துகளுக்குள் அடங்கி விடுமா?

நிறங்களுக்கு ஓர் உலகம் உண்டு. அதனோடு இந்தக் கேள்விக்கான பதிலை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே அடிப்படை நிறங்கள். ஆனாலும் இவை ஒன்றோடொன்று இணையும் போது எண்ணற்ற நிறங்கள் பிறக்கின்றன. அதே போல மனித குலத்தில் 38 விதமான அடிப்படை மனநிலைகள் காணப்படுகின்றன. அவை ஒன்றோடென்று கலக்கும் போது கணக்கில் அடங்காத மனநிலைகள் உருவாகின்றன.


5) மலர்மருந்துகளை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?

கடந்த காலத்திலோ, கடந்த ஆண்டோ, கடந்த மாதமோ, கடந்த வாரமோ, நேற்றோ ஒரு நபரின் மனநிலை, உணர்வு நிலை எப்படி இருந்தது என்பதைவிட இப்பொழுது அவருடைய மனநிலை, உணர்வு நிலை எப்படி உள்ளது என்று கேட்டு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நபர் மலர்மருத்துவ மனவகைகளில் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அதற்கு பொருத்தமான மருந்துகளை தேர்ந்தெடுப்பது எளிது.


6) கர்ப்பிணிப் பெண்கள் மலர் மருந்துகள் சாப்பிடலாமா?

சாப்பிடலாம். மலர்மருந்துகளால் எந்தத் தீங்கும் ஏற்படாது. மேலும் ஆரோக்கியமான, நேர்மறையான உணர்வுகளும், மனநிலைகளும் அமையப்பெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் சிறந்த நோய் எதிர்ப்பாற்றலும், அறிவாற்றலும், பண்புகளும் உள்ளவர்களாக இருப்பார்கள்


7) ரெஸ்கியூ ரெமடி மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் என்று கூறுகிறார்களே? உண்மையா?

ஆம், ஜெட் வேகத்தில் நிவாரணம் தரும் மலர் மருந்து இது. ஆழமான மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் ரெஸ்கியூ ரெமடி பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆர்.ஆர்.மிகத்துரிதமாகப் பணியாற்றி அதியற்புதமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தி நிவாரணம் வழங்குகிறது. மலர்மருந்துகள் மனிதநேயமும், எல்லையில்லா கருனைணயும் கொண்டவை என்பதற்கு இம்மருந்து சிறந்த எடுத்துக்காட்டு.


8) மலர் மருந்து அருகில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி