மகோதரம் குணமாக

 தீராத நோய்களுக்கு தீர்வு

பெருவயிறு எனும் மகோதரம் நீங்க

    பீர்க்கங்காயை இடித்து சாறு பிழிந்து இருபது மில்லி சாற்றுடன் மூன்று கிராம் பெருங்காயம் பொடியை சேர்த்து தினம் இரு வேளை பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பெருவயிறு வற்றி சுருங்கும் தீராத இந்த மகோதர நோய் குணமாகும் உடலில் உள்ள உப்பு நீர் குறையும்

  குறிப்பு

    நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பெருங்காயத்தை வாங்கி வறுத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும்

எலும்புருக்கி நோய் நீங்க

  இலந்தை மரத்தின் உள் பட்டையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரைத்து அதே அளவிற்கு நன்றாக சுனை போக அலசிய அருகம் புல்லையும் அரைத்து கொண்டு இதை கால் லிட்டர் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து ஒரு மாத காலம் தினம் இருவேளை பருகி வந்தால் எலும்புருக்கி நோய் நோய் விலகும்

    தொண்டையில் அடிக்கடி சளி அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமல் அவதிப்படும் நோயாளிக்கு இது ஒரு அருமருந்தாக அமையும்

  மேலும் தூதுவளை வல்லாரை இரண்டு கீரைகளையும் சமமாக கலந்து பருப்பிலிட்டு  கீரையாகவோ அல்லது துவையலாகவோ அல்லது இதை பொடியாக செய்து கொண்டு பசும் பாலில் கலந்து குடித்தாலோ இந்த எலும்புருக்கி நோயின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பூரணமாக குணமாகி விடும்

ரத்த சோகை குணமாக

  நெல்லிக்காய் வற்றல் வறுத்த சீரகம் இரண்டையும் சமமாகப் பொடி செய்து இதை தினம் இருவேளை வெந்நீரில் கலந்து பருகி வர ரத்தசோகை தீரும் காமாலை குணமாகும் கல்லீரல் பலப்படும் மேலும் உடல் மெலிதல் குணமாகி சரீரத்தில் சதைப் பற்று ஏற்படும் உப்பு காரம் குறைத்து இம் மருத்துவத்தை கையாண்டால் நல்ல குணம் கிடைக்கும்

விரை வாதம் நீங்க

  ஆறு உரித்த வெள்ளைப் பூண்டிதழும் இதே அளவிற்கு கருஞ்சீரகத்தையும் ஒன்றாக சேர்த்து இதை மைபோல் அரைத்து தினம் இருவேளை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர 

விரை வீக்கம் விரை வாதம்  இவை அனைத்தும் தீரும்

கண் பார்வை குறைபாடு நீங்க

  எளிதாகக் கிடைக்கும் பற்படாகம் எனும் மூலிகையை பசும்பால் விட்டு அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஆறிய வெண்ணீரில் குளித்து வர பார்வைத் திறன் அதிகரிக்கும் 

   மாலைக்கண் கிட்டப் பார்வை தூரப் பார்வை பார்வை மங்குதல் போன்ற கண் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் விலகும் ஒரு வாரம் இதை தொடர்ந்து செய்து வர நற்பலன்கள் உண்டாகும்

  இலந்தை மரத்தின் கொழுந்து இலையை அரைத்து பசும்பாலில் குழைத்து தலைக்கு தேய்த்து அரை மணிநேரத்திற்குப் பின்னால் தலை குளித்து வர பார்வை குறைபாடு நீங்கும் உடல் எரிச்சல் குணமாகும் வியர்வை நாற்றம் போகும் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்

                சித்தர்களின் சீடன்


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி