கழுதைப்பால்

 கழுதைப்பால் !!!

 

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதை பாலை குடித்ததாம் 


என்ற முது மொழி இங்கு கவனிக்க தக்கது .


இதை மூடநம்பிக்கை என்று ஒழித்ததே இந்த மருந்து வியாபார கும்பல் தான் 


தடுப்பு ஊசி போடாமல் நம் முன்னோர்கள் ஆரோக்கியமான 

வாழ்ந்தவர்கள் என்றால் 


இது தான் அதன் ரகசியம்  

ஆம் கழுதைப்பால் !!!


நமது பாராம்பரியதை தொலைந்து போனதால் தான் புதுப்புது வியாதிகள் வருகிறது .


கழுதை பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் வராதா?


பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, சத்து மிகுந்த தாயின் சீம்பாலை மறக்காமல் கொடுக்க வேண்டும்' என, மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீம்பால் தருகின்றனரோ இல்லையோ, கழுதைப் பால் கொடுப்பதில், பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர் !!!


'கழுதைப் பால் கொடுத்தால், குரல் வளம் நன்றாக இருக்கும், மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்களும் அண்டாது' என, காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கையே இதற்கு காரணம்.

மக்களின் இந்த நம்பிக்கையை குறிவைத்து, பொதி சுமக்க கழுதைகளை பயன்படுத்தியோர் எல்லாம், தற்போது, கழுதைப் பால் விற்று காசு பார்த்து வருகின்றனர். 


குட்டியுடன், கழுதைகளை ஓட்டிக் கொண்டு, அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். 


'ஒரு சங்கு கொடுத்தால் போதும்; நோய் நொடியே அண்டாது' என்று பால் விற்பவர்கள் விளக்கம் தந்து, ஒரு சங்கு, 50 ரூபாய், 100 ரூபாய் என, விலை வைத்து

விற்கின்றனர்.


'கழுதைப் பால் பயன்பாடு பாரம்பரியமாக நம்மில் இருந்துள்ளது; வாத நோய், கரப்பான், சிரங்கு, பித்தம், சித்தர பிரமை போக்கும் மருத்துவ குணம் உண்டு.


#மொடக்குறிச்சி அறச்சலூர் பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. #பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒலப்படி பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (50) இவரது மனைவி சின்னப்பொண்ணு (47) அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் (49), மனைவி மயில் (45). இவர்கள் சொந்தமாக 10 கழுதைகளை வளர்த்து வருகின்றனர். அந்த கழுதைகளைக் கொண்டு ஊர் ஊராகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர். #ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதிக்கு வந்த அவர்கள் பேரூராட்சி அருகில் தங்கி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு கழுதைகளை ஓட்டிச் சென்று அங்கேயே கழுதைப்பால் கேட்பவர்களுக்கு உடனேயே பால் பீய்ச்சி சங்கு மூலம் குழந்தைகளுக்கு விற்னை செய்து வருகின்றனர்.


ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.50 வீதம் விற்பனை செய்கின்றனர். இந்த கழுதைப்பால் குழந்தைகளுக்கு நோய் தாக்காமல் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் எளிதில் குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகும் என கூறி குழந்தைகளுக்கு பால் கொடுக்கின்றனர். ஒரு கழுதை நாள் ஒன்றுக்கு 300 மில்லி அளவு மட்டுமே பால் கொடுக்கும். ஒரு சங்கு பால் 20 மில்லி அளவு உள்ளது. ஒரு சங்கு ரூ.50 வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.


இதுகுறித்து சீரங்கன் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாக கழுதை மேய்த்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 10 கழுதைகளுடன் ஊரைவிட்டு வந்தோம். ஒவ்வொரு பகுதியாகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் அறச்சலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் பால் விற்பனையை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து இங்கு முடித்துக் கொண்டு பெருந்துறை, சென்னிமலை, காங்கயம், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கழுதைப்பால் விற்னை செய்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு வீடு திரும்புவோம் என்றார்


இதைப்போலவே 


பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த வியாபாரிஒருவர் தெருத்தெருவாக தன் கழுதைகளுடன் சென்று கூவிக்கூவி கழுதைப்பால் விற்கிறார். அதுவும் கண்முன்னாலேயே பால் கறந்து தருகிறார். 


பெங்களூரின் கோலாரைச் சேர்ந்த கிருஷ்ணப்பா வித்தியாசமான பால் வியாபாரி. அவர் விற்பதும் மாட்டுப்பால் அல்ல. கழுதைப்பால். ஒருநாளின் பெரும்பாலான நேரத்தில் தெருக்களில் தன் கழுதைகளுடன் உலா வருகிறார். பால் கேட்பவர்களுக்கு கண்முன்னாலேயே கழுதைப்பால் கறந்து தருகிறார்.


தெருக்களைச் சுற்றிவரும் அவர் கழுதைப்பாலின் பலன்களையும் கூவியபடி செல்கிறார். 'கழுதைப்பால்! ஆஸ்துமா, இருமல், சளியை குணப்படுத்தும், குழந்தைகளுக்கும் ஏற்றது கழுதைப்பால்' என்று உரக்கக்கூவி செல்கிறார் கிருஷ்ணப்பா. 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் கழுதைப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பால் கொடுக்க முடியாத சந்தப்பங்களில் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை கொடுக்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு என்றும் கூறி கிருஷ்ணாப்பாவிடம் பால் வாங்குபவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 


கழுதைப்பாலை குழந்தைகளுக்கு தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்குக் கொடுத்தாலே நோய்எதிர்ப்புசக்நி நன்கு அதிகரிக்கும் என்று உறுதியாகச் சொல்லும் கிருஷ்ணப்பா தன் வாழ்வாதரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறார் 

தகவல் 

வைத்தியர் மாலிக்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி