ப்ளம்ஸ் பழம்
இரத்தத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பை கரைக்கும் பழம் .. %
பிளம்ஸ் பழம்... >
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், இனிப்பு புளிப்பு என இரு சுவைகளில் இருக்கும் பிளம்ஸ் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பிளம்ஸ் மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும், சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் இருக்கும்.
பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியவை.
பிளம்ஸின் மகத்துவங்கள்
எளிதில் ஜீரணமாகக்கூடிய பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள இசாதின்(Isathin) என்ற வேதிப்பொருள் ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து மலச்சிக்கல் குறைபாட்டை சரி செய்யும்.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது. நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.
பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ள பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின்-கே உள்ளது.
இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. மேலும், ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.... %
நன்றி ... > வாழ்க வளமுடன் ... %
Comments
Post a Comment