புளிச்சகீரை ஊறுகாய்
*#புளிச்சக்கீரை_ஊறுகாய்....*
*தேவையான பொருட்கள்:*
புளிச்சக்கீரை2 கட்டு
பூண்டுப் பல் 20
மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
அரைக்க:
பெருங்காயம் - 1 சிட்டிகை
எள்ளு - அரை டீஸ்பூன்
தனியா - அரை டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 3, சீரகம் வெந்தயம், கடுகு - அரை டீஸ்பூன்
*செய்முறை :*
கீரையை அலசி வெறும் கடாயில் வதக்க வேண்டும். நன்றாக வதக்கும்போதே ஜாம் போல ஆகிவிடும். அதை இறக்கி வைத்துவிட்டு பூண்டுப் பற்களை நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பெருங்காயம், எள்ளு, தனியா, வர மிளகாய், சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைக்க வேண்டும். கடாயை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து நசுக்கி வைத்த பூண்டை எண்ணையில் போட்டு உடனே அடுப்பை அனைத்து விடவேண்டும். பின் கடாயை கீழே இறக்கி வைத்து விட்டு அதில் வதக்கிய கீரையை போட்டு கலக்க வேண்டும். அதில் மிளகாய்தூளுடன் வறுத்த மற்ற பொடிகளையும் சேர்த்து கலக்க வேண்டும். கடைசியில் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். நன்றாக கலந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சப்பாத்தி.
Comments
Post a Comment