இலந்தை பழம்

 🔯 #இலந்தைப்_பழம்………„❗❗


 #மருத்துவ_பயன்கள்❓❓❗❗


👉இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. 

அந்த பட்டியலில்……


▶ இலந்தைப் பழம், 


▶ காரம்பழம், 


▶ கோவாப்பழம் 


என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. 


👉இலந்தையின் பிறப்பிடம்

#சைனா.


4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். 


★#தமிழகத்தில்……


தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. 


அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. 


இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.


இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. 


👉1, காட்டு இலந்தை. 


👉 2, நாட்டு இலந்தை.


சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.


இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.


உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 


100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.


இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். 


இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.


இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். 


வேர், பட்டை பசித் தூண்டியாகவும், 


பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. 


💊#இது……… 


◀இரத்த சுத்திக்கும், 


◀முதுகுவலி, 


◀இருதயநோய், 


◀ஆஸ்த்துமா, 


◀கழுத்து நோய், 


◀கண் தெரிய, 


◀இரத்த அழுத்தத்தைக் குறைக்க, 


◀தலைவலி, 


◀மன உழைச்சலைப் போக்க, 


◀எந்த வலியையும் போக்கவும் வல்லது. 


இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். 


தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள். 


💊#எலும்புகள்_வலுப்பெற


உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.


💊#பித்தத்தைக்_குறைக்க


உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.


💊#வாந்தி_குறைய


பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.


💊#உடல்_வலியைப்போக்க


சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.


💊#செரிமான_சக்தியைத்தூண்ட


பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.


💊#பு‌த்‌தி‌க்கூ‌ர்மை‌க்கு


 மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும்.


 ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.


 பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.


 இதில் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அதிகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் எலு‌ம்புகளு‌க்கு அதிக ந‌ன்மைகளை அளிக்‌கிறது. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை‌யி‌ல் இலந்தை பழ‌ம் அமை‌ந்து‌ள்ளது.


 எல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.


💊#இளநரை‌க்கு……


 த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன்.


 இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏற்படு‌கிறது.


 இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.


 இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.


 மேலு‌ம், இள நரை ஏற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அதிகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.


💊#வயிற்றுக்_கடுப்புக்கு 


 பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.


 இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.


💊#பெண்களுக்கு 


 பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.


 கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.


💊#பித்தத்தைக்_குறைக்க 


உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.


 மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.


★இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.


★இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.


★இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.


★துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.


★சர்க்கரை வியாதிக்கு

இழந்தைபழம் பழத்தை இரண்டு கைப்பிடியளவு சாப்பிட்டு வரவும். தொடர்ந்து இருபது நாட்களில் சர்க்கரையின் அளவு குறைவும்.


பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது இதனால் தான் இழந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும் 


★மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக


இழந்தைஇலை மற்றும் மிளகு பூண்டு இவற்றை கை அம்மியில் அரைத்து கோலியளவு சாப்பிட்டுவர வலி உடனடியாக போய்விடும். மேலும் அந்த நாட்களில் ஏற்படும் தலைவலி தலையில் நீர் கோர்த்தலுக்கு இதன் இழை அருமையான மருந்து.


குழந்தைபேறு இல்லாதவர்களுக்கும் இதை கொடுத்தால் கர்ப்பபையில் உள்ள வாயுவை வெளியேற்றி குழந்தை உருவாக காரணமாக இருக்கிறது. 


🇨🇭 #மேலும்_சில………


♦பாலைவன பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்க இழந்தை இலையை நீரில் போட்டு குளிந்தாலோ அல்லது குடித்தாலோ மட்டுபடுகிறது. 


என்பதை அறிந்த்தால் தான் #நபிகள்_நாயகம் அவர்கள் இதை பற்றிய மருந்துவ குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் மேலும் #ஆரேபிய_பகுதிகளில் இறந்தவர்களை இந்த இலையை போட்டு கொதிக்க வைத்து 

அந்த நீரில் குளிபாட்டியதிலிருந்து இன்னொன்றையும் உணரமுடிகிறது இது மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. 


அதிவியர்வைக்கு அருமருந்து இது தான் இதன் இலைகளை பரித்து நன்றாக அறைத்து அதன் சாற்றை உள்ளங்கை உள்ளங்காலில் தடவி காலையில் எழுந்து இதன் தலையை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து பாருங்கள் ஒரு வாரம் உள்ளங்கால் கை வியர்த்தல் பூரண குணமாகும் .... 


#நபிகள்_நாயகம் இதை சிறப்பாக குறிப்பிட வியர்வையின் மூலம் உடலில் உள்ள நீர்சத்து குறைவதை மட்டுபடுத்துவதனால் தான் இவற்றை கொண்டாடி இருக்கிறார் பாலைவன பகுதிகளில் உள்ளவர்களுக்கே இதன் அவசியம்புரியும் ......


இது வரண்டநில தாவரம் ஆதலால் இதன் குணங்களும் அதிகம் என்பது உங்களுக்கும் தெரியும். 


பேரீட்சையை சாப்பிட்டு உணர்ந்த நல்ல விசயங்களை விட இழந்தைபழத்தை சாப்பிட்டு நான் உணர்ந்தது மிக மிக அதிகம் மிகவும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது. சோர்வோ கொட்டாவியோ வரவே வராது எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலியோ இயலாமையோ ஏற்பட்டதில்லை 


லேகியம் வாங்கி சாப்பிடுபவர்கள் பதினைந்து நாள் தொடர்ந்து இழந்தைபழத்தை சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள் இழந்தை பழம் இழந்ததை மீட்கும் என்று ..... மேலும் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட கூட்ட கூடும் அதற்கான நிறைய முகாந்திரங்கள் உண்டு யாராவது பயன்படுத்தி பின்பு சோதித்து அதன் முடிவை தெரியபடுத்துங்கள் .....


அற்புதமான முன்னேற்றத்தை உணர்வீர்கள் இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... 


பொட்டாசியம் உள்ளதால் கொஞ்சம் தொண்டை கட்டகூடும் சிலருக்கு அவர்கள் மிளகு தூளையும் உப்பையும் தூவி சாப்பிடுங்கள் .....


அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இழந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை என்பதை அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி