மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாதவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம்


ஒரு வேளைக்கு தயாரிக்க தேவையான மூல பொருட்கள்


1.மருதம் பட்டை பொடி -  5 கிராம்

2.சீரகம் பொடி - 5 கிராம்

3.தண்ணீர் -  200 மி.லி


செய்முறை

 

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.


👉🏼பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.


👉🏼மேலும் இந்த நீருடன் மருதம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சமஅளவு சேர்த்துக்கொள்ளவும்.


👉🏼மேலும் இந்த நீரை 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.


👉🏼பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இந்த நீரை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

மேலும் இந்த மருந்து எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.


இந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:


1) மனஅழுத்ததில் இருந்து விடுபட முடியும்.


2) இதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.


3) தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கும்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்