வலிகளின் தன்மை
------------உடல்,மூட்டு,வாத வலிகள்-------
வலிகள் பல விதம், பல காரணங்க ளால் இன்று பெரும் பாலான பெண்களை அதிகம் தாக்கிக் கொண்டிருக்கிறது.
வலிகளுக்கு வலி நிவாரணி மாத்திரை போடுவதால் அது நிச்சயம் உங்கள் சிறு நீரகங்களை சமன் இல்லாது செய்வதிலும் சாத்தியம் அதிகம்.
புரிய வில்லையா...!
நம் உடலின் ஒவ்வொரு வெளி பாகங்ளுக்கும்,
நம் உடலின் உள்ளே இருக்கும்(நம் கண்களுக்குத் தெரியாத) 12 ராஜ உறுப்புக்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.
இந்த உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் சூழலில் (இதற்கு பல காரணங்கள் உண்டு)
அதன் செல்கள் பெரிய நோய்கள் வராமல் தடுக்க முன் எச்சரிக்கையாக மூளை மூலம் தெரிவிப்பதே வலி.
ஆக இந்த வலிகள் நோயே அல்ல,
பெரிய நோய்கள் வருவதற்கான ஆரம்பம் தானே...!
இதை புரிந்து கொண்டு ஆம்பத்தி லேயே ,நேர்மறை எண்ணங்களின் துணையோடு தெளிவோடு யோசித் திருந்தால்,
நோய் பெரிதாகி வலிகளும் பெரிதாகி நோய் நிவாரிணி மாத்திரை போட்டு வர வேண்டிய அவசியமே இல்லையே.
சரி வலி நிவாரிணி மாத்திரை போடுவதால், வலி நின்று விட்டது, சரி ஆனால் வலி எங்கே தான் போனது என்றாவது யோசித்ததுண்டா...?
மாற்றுக் கருத்தேயில்லாமல் வலி எங்கேயும் போக வாய்ப்பில்லை, அது அங்கேயேதான் இருக்கிறது.
ஆனால் நீங்கள் உண்ட வலி நிவாரண மாத்திரை, உங்கள் உடலுக்குள் போய் தேவைக்கு அதிகமான சூட்டைக் உண்டாக்கி, வலி என்ற உணர்வை மூளை மூலம் தெரியப்படுத்த வேண்டிய செல்களை
செயல் இழக்கச் செய்து, வலி என்ற உணர்வை சொல்லும் மூளையையும் மழுங்கடித்து விடும்.(குவாட்டர் அடிச் சாலும் வலி தெரியா காரணமும் கிட்டதட்ட ஒன்று தான்)
மீண்டும் மீண்டும் புதுப் புது செல்கள் உற்பத்தியாகும் போதெல்லாம் அது அதன் கடமையை வலிகள் மூலம் சொல்லிக்கொண்டு தானே இருக்கி றது.
நாம்தான் திரும்பத் திரும்ப மாத்திரை போட்டுக் கொண்டு மூளையை திரும்பத்திரும்ப மழுங்கடித்துக் கொண்டு,
பெரிய நோய்களை நாமே தேடிக் கொள்வது தான் இன்றைய வாழ்க் கையின் வாடிக்கையாகிவிட்டது.
(சிலருக்கு எப்படியோ தெரிஞ்சி ருச்சி... இந்த டீவி சீரியல் மாத்திரை யைவிட நல்லா பவர்புல்லா வேலை செய்யிதுன்னு)
ஆரம்ப வலி உள்ளவர்கள் இந்த மருந்தை பயன் படுத்தி குணமாகிக் கொள்ளலாம்.
ரொம்ப நாள் பட்ட வலி உள்ளவர்களு க்கு நிச்சயம் வைத்தியர்கள் மூலம் குணம் கிடைக்க வாழ்த்துக்கள்.
மிளகு 100 கிராம்.
கடுக்காய் சூரணம் 100 கிராம் .
விளக்கெண்ணெய் 1 லிட்டர் .
மிளகு கடுக்காய் சூரணம் இரண்டையும் கல்வத்திலிட்டு வெந்நீர் தேவையான அளவு விட்டு நன்கு மை போல் அரைத்து விளக்கெண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய தும் வடிகட்டிக் கொண்டு,
காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு பால் அருந்த வேண்டும் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு ஐந்து அல்லது ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் மருந்துண்ணும் நாட்களில் புளி வாய்வு உணவுகள் தவிர்க்கவும்.
இதனால் ஆரம்பகட்ட
வலி உபாதைகள் குணமாகும்.
பெரிய உபாதைகள் வராது பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்று உள்ளதை உள்ளபடி ரிந்து கொண்டு நிறைய பேர் சித்த வைத்தியத்திற்குள் வந்து குணமாகிக் கொண்டிப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள்
ஆலோசனைக்கு:6385524094.
------------------------------------------
Comments
Post a Comment