மாவிலங்கு பூ
மாவிலங்கம் பூவின் மருத்துவக் குணங்கள்.:
மரவகைகளில் ஒன்று மாவிலங்கம். வெண் நிறத்தில் இருக்கும் மெல்லிய இதன் பூ மனதைக் கவரும் பூக்களில் ஒன்று.
காற்று அடித்து அங்கும், இங்கும் எளிதாக சுழன்று திரியும் இப்பூவானது பல்வேறு அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது.
வாத நோய், சிறுநீர்ப்பை நோய்கள், கல்லடைப்பு, சிறுநீரகப் பிணிகள் உள்ளிட்ட வர்ம நோய்கள் முதலியவற்றிற்கு பெரிதும் பயன்படுகின்றன.
கிராமப் புறங்களில் இன்றளவும் இது கை மருந்தாக பயன்பட்டு வருகிறது.
மாவிலங்கப் பூவை ஆறிய வெந்நீரில் போட்டு, அதனுடன் நாட்டு நெல்லிக்காயை இடித்துச் சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊற வைத்து வடிகட்டி, காலை, இரவு நேரங்களில் பருகி வர நீரழிவு நோயால் ஏற்பட்ட நாவறட்சி, பித்த உஷ்ணம், உடல் தளர்ச்சி ஆகிய நோய்கள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.
மாவிலங்கு இலையை அதன் பூவுடன் சேர்த்து அரைத்து 10- 15 கிராம் வரை இளநீரில் கலந்து அல்லது கொதித்த இளம் வெந்நீரில் கரைத்து ஆறிய பின்பு அப்படியே பருகிவர வயதானவர்களுக்கு உண்டாகும் சிறுநீர் தடைபடுதல், சிறுநீர் பாதை வீக்கம் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
மாவிலங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் தோல், சீந்தில் கொடி இம்மூன்றையும் இடித்து, இதன் எடைக்கு கால்பங்கு அளவாக மாவிலங்கப் பூ, மாவிலங்கு இலைகளையும் ஒன்றாகச் சேர்த்து 5 கிராம் அளவெடுத்து கால் லிட்டர் நீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டிப் பருகி வர வாத சம்பந்தப்பட்ட பிணிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
Comments
Post a Comment