பொன்னாங்கன்னி

 12.04.2021

*ஆரோக்ய மாலை வணக்கம்*🙏🙏

*நலமுடன் வாழ*


*பொன்னாங்கண்ணி*

கீரைகளின் ராஜா எனும் தகுதியை  பொன்னாங்கண்ணி கீரை  பெற்றுள்ளது.  பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த ஆரோக்கியம் தரும்...

*கண் நோய்கள் தீரும்*

பொன்னாங்கண்ணி கீரையை துவையலாகச் செய்து அல்லது கீரையாகக் கடைந்து தினமும் உண்டு வந்தால் விழித் திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி போன்றவை நீங்கும். 

 *ஒற்றைத் தலைவலி தீரும்*

பொன்னாங்கண்ணி கீரையை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, மற்றும்  ஒற்றைத் தலைவலி அனைத்தும் நீங்கும்......

*சர்வரோக நிவாரணி*

அதிக சுரம், வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தினால் குணமாகும்.... தாய்மார்களுக்கு நன்கு பல்சுரக்கச்செய்யும்..... குடலில் ஏற்படும்  இரணங்களை விரைந்து ஆற்றும்..... கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்களை வராமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு திறனை  அதிகமாக்கும்..... அதோடு ஜீரண மண்டலத்தை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்..

*குறிப்பு*

மேலே குறிப்பட்டவை அனைத்தும் சித்த மருத்துவத்தில் கூறியுள்ளவையே....

நாம் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.

*உபயோகிப்பதற்கு முன்பு இயற்கை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் உபயோகிப்பது நல்லது*....

👍👍👍👍👍

*நேர்மை வளரட்டும்*

*பிரியமுடன் உங்கள் மதி*

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி