அமுக்கரா

 *        ஆரோக்கியத்தை அள்ளித்தரும அமுக்குறா கிழங்கின் மருத்துவபயன்கள்


ஆண்மை சக்தி அதிகரிக்க 

 

                  சீமை அமுக்குறா கிழங்கு 

                                                      கசகசா 

                                       பாதாம் பருப்பு 

                                            சாரப்பருப்பு

                                       பிஸ்தா பருப்பு


    இவை ஐந்தையும் சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து இதை பசும்பாலில் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும்


உடல் பலவீனம் நீங்கி விந்துவில் உயிர்அணுக்கள் உற்பத்தியாகும்


தீய பழக்க வழக்கங்களால் விந்துவை வீணாக்கி இதனால் உடல் மெலிந்து பலம் குன்றிய ஆண்களுக்கு மீண்டும் விந்துவை உற்பத்தி செய்யும் ஆற்றல் இந்த மருத்துவத்திற்கு உண்டு


இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர உடலிலிருந்து கழிந்த  ஜீவசத்துக்கள் மீண்டும் உற்பத்தியாகி நரம்பு மற்றும் தசைகள் வலிமை பெற்று ரத்தம் உற்பத்தியாகி விந்து அதிகமாக ஊறும் இதனால் உடல் மிகுந்த வலிமை பெறும் மேலும் வாலிப வயதில் ஏற்படும் கிழட்டுத் தன்மை நீங்கும்


குறிப்பு

அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்


எல்லாவித சுரமும் நீங்க


அமுக்கிரா கிழங்கின் பொடியை மூன்று கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவர உடலிலுள்ள கோழை மற்றும் சளியை கரைத்து வெளியேற்றும்


நூறு டிகிரிக்கு மேல் உள்ள காய்ச்சலை குணப்படுத்தும் அமுக்கிரா பொடியை தினந்தோறும் தேனுடன் சாப்பிட்டு வந்தால் வாத பிணிகள் மற்றும் பாண்டு நோய்கள் குணமாகும் உடலில் ஏற்படும் சிறு சிறு வீக்கங்கள் நீங்கும்


அமுக்கரா கிழங்குப் பொடியுடன் தூதுவளை பொடியை சமமாக கலந்து இதில் மூன்று கிராம் எடுத்து தேன் அல்லது பாலில் சாப்பிட்டு வர வைரஸ் மற்றும் விச காய்ச்சலும் குணமாகும்


இந்த மருத்துவத்தை இரண்டு மாதம் கடைபிடித்து வந்தால் சத்து பற்றாக்குறையால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும் உடல் களைப்பு மற்றும் உடல் பலவீனம் நீங்கி நாடி நரம்புகளுக்கு நல்ல வலிமை கிடைக்கும் மேலும் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும்


பொதுவாக அமுக்குறா கிழங்கின் பொடியை பால் அல்லது தேனுடன் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கட்டாயமாக ஆண்மை சக்தி அதிகரிக்கும்


                  சித்தர்களின் சீடன் 

             பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி