இந்த கால சூழ்நிலைக்கான மலர் மருந்து
இந்த நோய்பரவும் சூழலில் எந்த மலர்களை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
அதற்கான பதில்
மலர்மருத்துவத்தில் ஒரு பிரச்சனைக்கு என்று பொதுவான மருந்தை குறிப்பிடுவது கடினம். காரணம் மனிதர்களுக்கு வரும் சூழ்நிலை ஒரே மாதிரி இருந்தாலும், அவர்களின் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணம் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் மனநிலைக்கு ஏற்ப தான் மருந்து தேர்ந்தெடுக்க முடியுமே தவிர பிரச்சனைக்கு அல்ல.
எனவேதான் மலர்மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் எட்வர்ட் பாட்ச் அவர்கள்
“நோய்களுக்கு மருந்து இல்லை, நோயாளிக்கு தான் மருந்து”
என்று தெளிவாக கூறியுள்ளார்.
இருந்தாலும் இந்த சூழலில் பொதுவாக மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று என் மனதிற்கு தோன்றியதை இங்கு நான் விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்த சூழலில் பொதுவாக உலக மக்கள் மற்றவர்களை குறை சொல்லும் அல்லது இதற்கு அவன் தான் காரணம் என குற்றம் சாற்றும் மனநிலையில் தான் அதிகம் காணப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக
👉 இந்த நோய் பரவலுக்கு அந்த நாடு தான் காரணம்
👉 ஆளுங்கட்சி சரியில்லை
👉 எதிர்கட்சி சரியில்லை
👉 சட்டம் ஒழுங்கு சரியில்லை
👉 பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை
👉 யாரும் மாஸ்க் அணிவதில்லை
👉 யாரும் சமூக இடைவெளி பின்பற்றவில்லை
👉 பயம் பீதியை அதிகம் தூண்டும் மீடியா தான் காரணம்
👉 இந்த மருத்துவம் சரியில்லை, அந்த மருத்துவம் சரியில்லை
👉 மருத்துவமனை சரியில்லை
👉 டாக்டர் சரியில்லை, நர்ஸ் சரியாக கவனிக்கவில்லை
👉 நோயாளி ஒத்துழைப்பது இல்லை
👉 தடுப்பூசி போட்டுகொள்ள மறுக்கிறான்
👉 அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே செல்பவனை பார்த்து நீ தான் நோயை கொண்டு வரப்போகிறாய் என்பது
👉 அவனால் தான் எனக்கு நோய் தொற்றி இருக்குமோ
என்று பல விதமாக மற்றவர்களை குறைசொல்லும் வார்த்தைகளை தான் நான் அதிகம் கேட்கிறேன்.
“ தீதும் நன்றும் பிறர் தர வாரா ”
ஆகையால் மலர்மருத்துவத்தில் ”Willow” என்ற மலர் மூலம் மட்டுமே இந்த மனநிலையை மாற்றமுடியும். அப்படி மாறும்பட்சத்தில் நிச்சயம் இந்த சூழலில் இருந்து அனைவரும் விரைவில் விடுதலை பெற முடியும் என்பது என் கருத்து.
நன்றி
ர.ஞானகுமரன்
மலர்மருத்துவம் & வாழ்வியல் பயிற்சியாளர்
www.greatenergy.in
Comments
Post a Comment