உண்ணா நோன்பு

 🇨🇭 #உலகில்_மிகச்சிறந்த_மருந்துவர்  #உங்கள்_உடல்…❗❗


🔯 #உலகில்_மிகச்சிறந்த_மருத்துவம்  #உண்ணா_நோன்பு❗❗❓❓❓


❓❓பெரும்பாலான வியாதிகள் நம்மை நெருங்காமல் இருக்க செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள்...❓❓❓


👉வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.


நமது உடலை இயக்கும் "உயிர்சக்தி" மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.


⭕ இது தான் அந்த மூன்று சக்தி……❗❓


➡ செரிமான சக்தி


▶ இயக்க சக்தி


▶ நோய் எதிர்ப்பு சக்தி


இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.


👉காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா❓ 


பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா❓


முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.


மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா❓ முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.


உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா❓ இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு❓என்ன❓

பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.


இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.


உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.


உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.


உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.


⭕ சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது❓


ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் உண்ணா நோன்பு❗


➡ ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.


➡ ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.


➡ ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.


இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.


💊பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.


இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது…… 


💊 உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.


திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இந்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.


💊வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.


எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.


உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.


💢 #நோன்பின்_போது_என்ன

#நடக்கலாம்❓


👉ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.


➡(1) - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.


➡(2) - மலம் கருப்பாக வெளியேறலாம்.


➡(3) - சளி வெளியேறலாம்.


➡(4) - உடல் ஓய்வு கேட்கலாம்.


➡(5) - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)


➡(6) - வலிகளை உணரலாம்.


💢 #_என்ன_மாற்றங்களை #எதிர்பார்க்கலாம்❓


⭐(1) - அதிக உடல் எடை சீராகும்


⭐(2) - முகம் பொழிவு பெறும்


⭐(3) - கண்ணில் ஒளி வீசும்


⭐(4) - சுறுசுறுப்பு அதிகரிக்கும்


⭐(5) - இரத்தம் தூய்மை பெறும்


⭐(6)  - தோலின் நிறம் சீராகும்


⭐(7) - மன உளைச்சல் குறையும்


⭐(8) - கவலை, பயம், கோபம் குறையும்


⭐(9) - புத்துணர்வு கிடைக்கும்


⭐(10) - உடல் பலம் பெறும்


⭐(11) - மன அமைதி பெறும்


⭐(12) - ஆழ்ந்த தூக்கம் வரும்


👉#ஆக_மொத்தத்தில……


▶உடலில் ஆரோக்கியமும்❗


▶எண்ணத்தில் அழகும்❗


▶மனதில் நிம்மதியும்❗


கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.


உடல் உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.


⭐ உண்ணா நோன்பை கடைப்பிடித்து……

நோய் நொடியில்லாமல் 

வாழுங்கள்…🆗


🇨🇭 பெரும்பாலான வியாதிகள் நம்மை நெருங்காமல் இருக்க செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள்...❓❓❓


முதுகெலும்பை 90 டிகிரி நேராக வைத்து நடமாடும் ஒரே படைப்பு மனித இனம் மட்டும்தான்...மற்ற எந்த ஜீவராசிக்கும் இறைவன் இப்படிப்பட்ட அமைப்பை படைக்கவில்லை..இதுவே மனிதனை இறைவன் எவ்வாறு விரும்பி படைத்துள்ளான் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு..ஆனால் மனிதன் தன்னுடைய உடம்பை சரியான முறையில் பேணி பாதுகாக்காததால் பலவகையான இன்னல்களுக்கு ஆளாகின்றான்..


அவசரமான உலகில் நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்..உண்ணும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கூட நமக்கு கவனம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது...


தண்ணீர் பருகும் போதோ அல்லது உணவு உண்ணும் போதோ அல்லது சிறுநீர் கழிக்கும் போதோ நின்று கொண்டு செயல்படாதீர்கள்..நிச்சயம் குடல் இறக்கம் என்னும் ஹெர்னியா வரும்..


💊சாப்பிடும் போது நமது கண்கள் சாப்பாட்டின்மீது இருக்க வேண்டும்..


கண்களால் ஸ்கேன் செய்யப்பட்ட உணவு மூளையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு...


வாயில் வைக்கப்பட்டவுடன் உமிழ்நீர் கலந்து பற்களால் அரைக்கப்பட்டு ...


வயிற்றுக்கு போகும் எந்த உணவும் செரிக்காமல் இருந்ததில்லை...


நம் முன்னோர்கள் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று நம்மை கண்டிப்பார்கள்.காரணம் சாப்பாட்டின் மீது கவனம் இல்லாமல் பேச்சின் மீது கவனம் சென்று விட்டால் செரிமான கோளாறு வந்துவிடும் என்பதால்தான்... ஆனால் சாப்பிடும்போது டி.வி.பார்க்காத அல்லது செல்லை நோண்டாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு காலம் மாறி விட்டது..இப்படி இருக்கும்போது அல்சர் ஏன் வராது...செரிமான கோளாறு ஏன் வராது...


💊பசிக்கு உணவு என்ற நிலை மாறி வேளைக்கு உணவு என்ற நிலையில் நாம் இணைந்து விட்டோம்..


▶காலை 9 மணிக்குள் டிபன்...


▶மதியம் 1 மணிக்கு சாப்பாடு..


▶இரவு 9 மணிக்கு மீண்டும் டிபன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்..


என்றைக்காவது பசி ஏற்பட்டு சாப்பிட்டு இருக்கின்றோமா என்று நினைத்து பாருங்கள்..


முதலில் வேளாவேளைக்கு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு..


பசி எப்போது ஏற்படுகிறதோ அப்போது சாப்பிடபழகுங்கள்.. உடலுக்கு நோயே வராது..


சாப்பிடும்போது தரையில் சம்மணமிட்டு அமர்ந்து...முடிந்தால் கோரைப்பாயில் அமர்ந்து சாப்பிடுங்கள்..காரணம் சம்மணமிட்டு அமர்வதால் காலுக்கு வரும் இரத்தம் தடைபட்டு இடுப்புக்கு மேல் உள்ள அனைத்து பகுதிக்கும் அதிகமாக செல்லும்..இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகள் நல்ல முறையில் இயங்கும்..எந்த உறுப்பும் பழுதடையாது..


💊தினமும் ஒரு மணி நேரமாவது செருப்பில்லாமல் புல்தரையில் நடைப்பயிற்சி செய்யுங்கள்..

கண்பார்வை கோளாறு உங்களுக்கு அருகில் வராது..


வீட்டில் உள்ள சிறுசிறு வேலைகளை ஆள்வைத்து செய்யாமல் நீங்களே செய்யுங்கள்..வீட்டில் உள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கும்..உங்கள் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்..


தண்ணீரை கடகடவென குடிக்காதீர்கள்..மிடறு மிடறாக குடியுங்கள்..அப்போதுதான் இரத்தத்திற்கு தேவையான பி.ஹெச்.மதிப்பு கிடைக்கும்.. 


தண்ணீர் பாத்திரத்தில் மூச்சு விடுவதோ அல்லது சூடான பானங்களை ஊதிக் குடிப்பதோகூடாது..காரணம்..

பாத்திரத்தில் நாம் விடும் மூச்சும் சூடான பானத்தில் நாம் ஊதும் காற்றும் கார்பண்டை ஆக்ஸைடுதான் என்பதை நினைவில் கொள்க...


அதிக சூடான உணவையோ அல்லது பானங்களையோ...அதிக ஜில்லிப்பான உணவையோ அல்லது பானங்களையோ சாப்பிட வேண்டாம்..மிதமான சூடும் மிதமான ஜில்லிப்பும் உடலுக்கு நன்று.....


மலம் கழிக்கும்போது முக்காதீர்கள்..அது தானாக வருவது மட்டும் வரட்டும்..


சிறுநீரை அடக்காதீர்கள்..


அனைத்துவகை உணவையும் விரும்பி சாப்பிடுங்கள்..மனம் ஒப்பாத எந்த உணவையும் சாப்பிடாதீர்கள்..


அசைவ உணவு சாப்பிடும்போது...

நாம் சாப்பிடும் இறைச்சிக்கு சமமாக பச்சை வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுங்கள்...


வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்..குளித்துவிட்டு மதிய வேளையில் கண்டிப்பாக தூங்கக்கூடாது..


இவை எல்லாம் உடலுக்கு...


காலை வேளையில் இறைவழிபாடு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்..அவரவர்களின் கடவுள்களை முழு மனதோடு வழிபட வேண்டும்..அப்போதுதான் மனம் தெளிவடையும்..


உடலும் மனதும் தெளிவாக இருந்தால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்..


எனவே நம்முடைய அன்றாட செயல்பாடுகளை மாற்றி அமையுங்கள்..


நோயில்லா உலகம் செய்ய முயற்சியுங்கள்...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி