அகத்தி சாறு

 *சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி !*


தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. 


அகத்தியில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. 


பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை.


அகத்திக்கீரை வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது.


புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொந்தரவுகளுக்கு, அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


உடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. 


தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும்.


பருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.


செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும்.


அகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சினால், மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி வரும் காய்ச்சல் (Periodic fever) நீங்கும்.


அகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும்.


ஒரு பங்கு அகத்திக் கீரைச் சாறுடன், ஐந்து பங்குத் தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து, தலை உச்சியில் விரலால் தடவ, குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை (சைனஸ் பிரச்னைகள்) சரியாகும்.


சீமை அகத்திக் கீரையின் சாற்றை, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்படும் படர்தாமரை மீது தடவி வந்தால், விரைவில் குணமாகும்.


கை கால்களில் காயம் ஏற்பட்டால், அதன் மீது அகத்திக்கீரையை வைத்துக் கட்டினால், காயம் ஆறிவிடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி