சப்போட்டா பழம்

 சப்போட்டாவின் பயன்கள்.:


சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மருத்துவம் குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


*சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும்.


*சப்போட்டா கூழுடன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.


*சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.


*பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கு இது நல்ல மருந்து.


*சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.


*ஆரம்ப நிலை காச நோய் உள்ளவர்கள் சப்போட்டாப்பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரம் பழமும் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.


*மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.


*சப்போட்டாக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மை உடையது.


*தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் கிட்டும்.


*கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பயனளிக்கும்.


*சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களைச் சீராக்கி, கொழுப்பு படிவதைத் தடுக்கும்.


*தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் நீங்கும்.


*சப்போட்டாப் பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி