பார்க்கின்சன்

 🔯#பார்கின்சன்_என்பது_நோய்

#கிடையாது


🔯 #அது_ஒரு_குறைபாடு……❓❗


⭕  பார்கின்சன் என்பது

நடுக்குவாத நோய் அல்ல…❓❗


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கும் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய்.


மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


மனித உடலின் மிக முக்கியமான இரண்டு பகுதிகள்’ என மூளையையும் இதயத்தையும் சொல்லலாம். 


உயிர் இயக்கத்துக்கு இதயம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு உடலின் இயக்கத்துக்கு மூளை அவசியம். 


அப்படிப்பட்ட மூளை செயல்பாட்டுக்கு உதவுவது நரம்பு மண்டலங்கள். 


பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். 


மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. 


நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில்……


🉐👉 1, ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், 


🈵👉 2, ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. 


அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று❗


🈳 அது என்ன பார்கின்சன் பாதிப்பு❓


நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் #டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன்.


நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும். நிலைமை கடினமாகும்போது, நிற்பது, நடப்பது,


பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது... என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்த 

முடியும்.


இது ஒரு நோய். இது மைய நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சிதைக்கக்கூடிய நோய் ஆகும். இதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் சரிவர தெரிவதில்லை. 


போக போக இதன் வீரியம் அதிகமாகும். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயக்கத்திறன், பேச்சு சரிவர இருப்பதில்லை.


இதன் முக்கியமான அறிகுறி “#Tremors” அதாவது #நடுக்கம். இந்த நடுக்கம் முதலில் கையில் ஏற்படும். 


நடுக்கம் ஏற்படும் கை ஓய்வு நிலையில் உள்ளபோது மட்டுமே நடுக்கம் இருக்கும். 


பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் ஏற்படாது நடுக்கம் ஏற்பட்டால் கூட ஓய்வு நிலையில் ஏற்படும் நடுக்கத்தைவிட குறைவாகவே இருக்கும். 


மனசோர்வு, கோவம் ஏற்படும்போது நடுக்கம் அதிகமாகும். 


இவ்வாறு நடுக்கம் ஏற்படுவதால் இதனை நடுக்குவாத நோய் என்று நினைத்து விடக்கூடாது. 


🔴👉 இது நடுக்குவாத நோய் அல்ல❗


தசைநார் வலிப்பாக நோய். இந்நோய் பாதிக்கப்பட்ட 30% பேர்களுக்கு அந்நோய் தொடங்கும் கட்டத்தில் தசைநார் வலிப்பு ஏற்படுவதில்லை. 


"பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கு, வயது முதிர்வு, மரபுக்குறைபாடு, குடும்பச்சூழல் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. 


பெரும்பாலும் 50 முதல் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, இப்போது சிறு வயதினறுக்கும் பார்கின்சன் எளிதில் ஏற்படுகிறது. பாதிக்கப்படுபவர்களில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள். 


பார்கின்சன் தசை இயக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களால் தொடர்ந்து பேசவோ, எழுதவோ, ஒரு பொருளைச் சரியாகப் பிடிக்கவோ முடியாது. 


கை நடுக்கம், சுருக்கமாகப் பேசுவது, முறையற்ற கையழுத்து நடை, கவனச்சிதறல் இவர்களுக்கு இருக்கும்.”


💢 #அறிகுறிகள்_என்ன…❓❓❓


◀ உடல் இயக்கம் தொடர்பான பிரச்னைகள் - 


கை, விரல் நடுக்கங்கள், உடலியக்கம் மாற்றம், மிக மெதுவாகச் செயல்களைச் செய்தல், கூன் விழுவது போன்ற உணர்வு, நடப்பதில் சிக்கல் போன்றவை.


◀ ஆற்றல் பிரச்னைகள் 


உடலில் திடீரென எந்தச் செயல்களையும் சரியாகச் செய்ய முடியாமல் சக்தி குறைந்துபோவது.


◀ தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் - 


பேசுவது, எழுதுவதில் பிரச்னை. பேசும்போது கோர்வையாக வார்த்தை வராமல் தடுமாறுவது. எழுதும்போது எழுத்து வழக்கம்போல் இல்லாமல், கிறுக்கலாக விழுவது.


◀ தூக்கப் பிரச்னைகள் - 


அரைத் தூக்கத்தில் விழித்துக்கொள்ளுதல், தூக்கமின்மை போன்றவை. 


◀ பார்வைப் பிரச்னைகள் - 


எதிரில் இருக்கும் பிம்பங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது சரியாகப் புலனாகாமல் இருத்தல்.

இவையெல்லாம், பொதுவான சில அறிகுறிகள். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடு


◀ பேச்சுத்திறன் மெதுவாக குறையும். 


◀ பேசுவதைப் புரிந்து கொள்ளுவதிலும் சிரமம் ஏற்படும். 


◀ துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். 


◀ முக பாவனைகள் குறையும். 


◀ பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். 


◀ தசைகளில் இறுக்கம் ஏற்படும். 


◀ நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். 


◀ நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. 


◀ பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம்.


◀ செயல்பாடுகளில் வேகம் குறைந்த உணர்வு.


◀ கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம். 


◀ ஒரு செயல்பாட்டை நேர்த்தியாக செய்வதில் சிரமம் இருக்கும். 


◀ களைப்பு, 


◀ மனச் சோர்வு, 


◀ மலச்சிக்கல்,  


◀ சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும்.


◀ நடுங்கிய பேச்சு


◀ பேச்சுக்குளறல்


◀ உணர்ச்சியின்மை


◀ பதற்றம்


◀ முகர்தல் உணர்வுக் குறைவு அல்லது இழப்பு


◀ வலி, நரம்பு நோய், தசை, மூட்டுகள் மற்றும் தசைநாண்கள், நெருக்கடியை ஏற்படுத்துதல்.


◀ குற்றுநிலை குறைந்த இரத்த அழுத்தம்.


◀ எண்ணெய்ப் பசையுள்ள சருமம் மற்றும் 


◀ சிவந்த தோல் அழற்சி


◀ சிறுநீரக அடங்காமை  இரவில் சிறுநீர் மிகைப்பு (இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தல்)


◀ மாறிய பாலுணர்வுச் செயல்பாடு,

   பாலியல் விழிப்புணர்ச்சி

   வலுக்குறை.


◀ அதிகப்படியாக வியர்த்தல்


◀ இமைத்தல் விகிதம் குறைந்துவிடல்.


◀ கண் பகுதிகளில் அழற்சி


◀ கண்ணீர் திரையில் மாற்றம்


◀ காட்சிக்குரிய மாயத்தோற்றங்கள்.


◀ கண் குவிதல் குறைதல்


◀ இமைச் சுருக்கம்.

 

◀ விழியசைவில் மாற்றங்கள் 


◀ இமைகளைத் திறப்பதற்குச் சிரமமாக இருத்தல்.


👉 மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


இது பொதுவாக மூளையின் டோபோமினர்ஜிக் நரம்பணுக்களில் உற்பத்தியாகும் டோபாமைனின் பற்றாக்குறையான உருவாக்கம் மற்றும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது.


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கூம் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உடற்பயிற்சி தேவை. நாட்கள் செல்ல செல்ல இதன் அறிகுறிகள் மிக மோசமாக மாறும். அதாவது……… 


⏪நம் தோற்றத்தில் கூட மாறுபாடுகள் ஏற்படும். 


⏪மூட்டு விறைப்பு ஏற்பட்டு நடை மற்றும் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். 


⏪மங்கிய தோற்றம் உண்டாகும். 


⏪பதற்றம் அதிகமாக இருக்கும். 


❗ தற்போது  parkinson’s dieseas நோயை குணப்படுத்த ஆங்கில மருந்து முறைகள் இல்லை.❓


இது ஒரு உயிக்கொல்லி நோய் அல்ல. காலத்தால் ஏற்பட்டு தீவிரமடைய கூடிய ஒரு வகையான நோய். ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் குறைவு தான். 


உடற்பயிற்சி, குடும்ப நபர்களின் ஆதரவு, அன்பு அதிகமாக கிடைத்தால் வெகு விரைவாக இதிலிருந்து குணமடைந்து விடலாம். 


ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். மனசோர்வு இல்லாமல், ஆரோக்கியமான உணவு அருந்துதல் இதை மேற்கொண்டால் ஒரு நோயும் நம்மை அணுகாமல் வாழலாம்❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி