முடவாட்டுக்கால்

 முடவாட்டுக்கால் என்ற அபூர்வ காய கல்ப மூலிகை..!

*************************************************


(ப்ரமரிஷி மலையில் என் குருநாதர் அன்னை சித்தர் அவர்கள் அபூர்வ சஞ்சீவினி தைலம் தயாரிக்கும் போது அவர் காட்டிய அபூர்வ மூலிகையான முடவாட்டுக்கால் பற்றி இன்று அனைவரும் அறிய விரிவாக எழுதுகிறேன்.)


முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகையை முடவாட்டு தேக்கு என்பார்கள்.


மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.


சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன.


"ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு.

கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலைமருந்தியால் பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம் இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து  தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்.......


காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை ஆகாயராஜன் எனவும்,முடவாட்டுகால் கிழங்கு என்றும் கூறியுள்ளார் முடம் நீக்கும் கிழங்கு மருவி முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு.


பொதுவாக மனிதர்களைத் தாக்கும் நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.


இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை


வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....


உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது 

உடல்,மனம்,புத்தி,அகியவை புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு முடவாட்டுகால் கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன .... 


ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு  கால்சியம்  விந்துவை அடர்த்தியாக மாற்றும்  அதனால் தாம்மத்தியம் நீண்ட நேரம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு  ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.


முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை  அனைவரும் குடித்துவரலாம்.


இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.


டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.


இவற்றின் வேர்கிழங்குகள் தான் முடவாட்டுக்கால் . இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.


குறிப்பிட்ட சில மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது


முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந் தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறுநீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்புகள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக்கும். அதோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி உடலைப் பக்குவப்படுத்தும்.


*முடவாட்டுக்கால் கிழங்கு.*

***************************


சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும்.இம்மூலிகையில் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.


இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இது கொல்லிமலை, மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.


இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.


முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :

****************************************


முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள்.  


சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.


முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

**********************************************


முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 

மிளகு                                    - 20 - No

சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 

பூண்டு                                   - 3  பல் 

தக்காளி                                 - 1


அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும்.


இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.  


2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர் முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


அனுதினம் ரசம் ஆரோக்யம் வசம். ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல். சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப்  பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். 


இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது  ரசத்தில்தான். புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம்,  கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத்  தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம்

​ பெற்றுவிடும்.  பல நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின்  குறைபாடுகளையும் தாது உப்புக் ​ குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. அயல்  நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது,  ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது  சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும். 


சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.  ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி,  கண்களில் ஏற்படும்  காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா  முதலியவற்றைக்  குணப்படுத்துகிறது.  ரசத்தில்  சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான  கோளாறுகள்   அனைத்தையும்  குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல்  தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும்  அமைதியைக்  கொடுக்கிறது.  நரம்புகள்  சாந்தமடைவதால் நோய்கள்  குணமாகின்றன. அபார்ஷன்  ஆகாமல்   தவிர்த்துவிடுகிறது. 


புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன  அகலுகின்றன.  கண்களின்  பார்வைத்  திறன் அதிகரிக்கிறது.  மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல்  தடுக்கிறது.  வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச்  ​  செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் ​   தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை   இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை ​  உதவுகிறது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று  தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து ​  நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக்  கட்டுப்படுத்துகிறது.  இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக்கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல்  போன்றவையும் எட்டிப் பார்க்காது.  தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.  மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு  இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, ​ குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.  ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும்,

​  மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது. ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.  வயிறு  சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக  வைத்திருக்க உதவுகிறது.  ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.  மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால்,  ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.  வெயில் காலத்தில் நாக்கு வறட்சி,  அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம். உணவு மருந்தாகக் குணப்படுத்தும். எனவே,

​  ரசம் என்னும் சூப்பர்  திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்... %


நன்றி : -  சித்தர் குரல்


நன்றி ... வாழ்க வளமுடன் ... %

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி