உடலை செயலிழக்கச்செய்யும் நோய்கள்
#எச்சரிக்கை❗ ❗❗
#இந்த_4_நோய்களும்_ஒருவரை #ஊனமாக்கிவிடும்_தெரியுமா…❓❓❓
👉மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் பல நோய்கள் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியவையாக இருந்தது. ஆனால் தற்போது பல நோய்கள் ஆரம்பதிலேயே கண்டறியப்பட்டு, சரியான சிகிச்சை அளித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு செய்ய முடிகிறது. இருப்பினும் சில குறைபாடுகள், எதிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களை அசைக்க முடியாத அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சில நோய்கள் ஆரம்ப காலத்தில் சாதாரணமாக காணப்படலாம். இருப்பினும் சில காலம் கழித்து, அந்நோயின் தாக்கத்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாத அளவில், கை, கால்களை அசைக்க முடியாதவாறு போகலாம். எனவே எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே அந்த பிரச்சனைக்கான சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இப்போது ஒருவரை ஊனமாக்கும் சில கொடிய நோய்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின் எங்கும் அசைய முடியாத அளவில் ஒரே இடத்தில் முடங்கிவிட நேரிடலாம்.
🔴 #பார்கின்சன்_நோய்❗❓
இந்தியாவில் இருந்து பார்கின்சன் நோய் வேரோடு வெளியேற்றப்பட்டதாக கூற்றுகள் இருந்தன. இருப்பினும், இந்தியாவின் பல பகுதிகளில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோர் இருக்கத் தான் செய்கின்றனர்.
பார்கின்சன் என்பது நோயாளியின் உடலில் நிலையான அதிர்வுகளைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலை ஆகும். பார்கின்சன் நோயின் அறிகுறிகள் பிற்கால கட்டங்களில் அதிகம் காணப்படலாம். இதன் விளைவாக அன்றாட செயல்பாடுகளான உட்கார்வது, நிற்பது போன்றவற்றில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். முக்கியமாக பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரை அடக்குவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும்.
💢 பார்கின்சன் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள்❓
* எழுதுவதில் சிரமம் அல்லது மாற்றம்.
* நடுக்கம், குறிப்பாக விரல், கை அல்லது பாதங்களில்.
* தூக்கத்தின் போது கட்டுப்படுத்த முடியாத இயக்கங்கள்.
* மூட்டு விறைப்பு அல்லது மெதுவான இயக்கம்.
* குரல் மாற்றங்கள்.
* கடுமையான முக பாவனை.
* குனிந்த தோரணை.
🔴 #மல்டிபிள்_ஸ்களீரோசிஸ்❗❓
இது மைய நரம்பு மண்டலத்தின் தாக்கத்தினால் ஏற்படும் ஒரு மூளை நோய். இதுவும் ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோயாகும். இது இரத்தத்தின் வழியாக மூளையை சென்றடைந்து, தாக்கத்திற்கான விளைவைக் காட்டும். ஆரம்பத்தில் வீக்கம் மட்டும் அறிகுறியாக காணப்படும். பின் போக போக உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.
உலகளவில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் பிரச்சனையைக் கொண்டிருக்கின்றனர். இந்த நோயானது ஆண்களை விட பெண்களிடம் தான் காணப்படுகிறது. எப்போது நோயெதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அப்போது நிலைமை மோசமாகக்கூடும். அந்த சமயங்களில் உயிரணுக்களின் வளர்ச்சி நின்றுவிடும் மற்றும் முதுகெலும்பில் இரத்த உறைவு தோன்றத் தொடங்குகிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், இப்பிரச்சனை உள்ளோரை வாழ்நாள் முழுவதும் முடக்கிவிடும்.
💢 மல்டிபிள் ஸ்களீரோசிஸ் அறிகுறிகள்❓
* பார்வை பிரச்சனைகள்
* வலிகள் மற்றும் பிடிப்புக்கள்
* பலவீனம் அல்லது சோர்வு
* தலைச்சுற்றல்
* சிறுநீர்ப்பை பிரச்சனைகள்
* பாலியல் பிரச்சனைகள்
* கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை
* அறிவாற்றல் சிக்கல்கள்
🔴 #பெருமூளை_வாதம்❗❓
பெருமூளை வாதத்தை மூளை பக்கவாதம் என்றும் அழைப்பர். இந்த நோயின் தாக்கத்தால் உடலுறுப்புக்களை அசைப்பது கடினமாக இருப்பதோடு, அன்றாட செயல்பாடுகளிலும் சிரமத்தை சந்திக்கக்கூடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டால், உடலுறுப்புக்களை அசைக்க முடியாமல் முடங்கிக் கிடப்பதைத் தடுக்கலாம். இந்த வகை கோளாறு ஒருவரின் இயக்கத்தை பாதித்து, நாளடைவில் ஒரே இடத்தில் முடங்கச் செய்துவிடும்.
💢 பெருமூளை வாதத்தின் அறிகுறிகள்❓
* பேசுவதில் தாமதம் மற்றும் பேசுவதில் சிரமம்
* தசை தொனியில் உள்ள மாறுபாடுகள்
* கடினமான தசைகள்
* நடுக்கம் அல்லது விருப்பமில்லாத இயக்கங்கள்
* அதிகப்படியான வீக்கம் மற்றும் விழுங்குவதில் சிக்கல்கள்
* நடப்பதில் சிரமம்
* நரம்பியல் பிரச்சனைகளான வலிப்பு, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் குருட்டுத்தன்மை
🔴 #டுபுய்ட்ரென்_நோய்❗❓
இது ஒரு மரபணு நோய். பலருக்கும் இந்நோய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நோயினால், உள்ளங்கைகளில் வடு திசு உருவாகிறது. இதன் காரணமாக கைகள் இறுக்கமடைவதோடு, விரல்கள் சுருங்குவதை உணரக்கூடும். இதன் விளைவாக அன்றாட செயல்பாடுகளை செய்வதே கடினமாக இருக்கும். இந்த நோயால் கைகள் மற்றும் கால்கள் மட்டுமின்றி, அந்தரங்க உறுப்புக்களும் பாதிக்கப்படும்.
💢 டுபுய்ட்ரென் நோயின் அறிகுறிகள்❓
* உள்ளங்கையின் ஒரு பகுதி தடிமனாக இருக்கும்.
* உள்ளங்கையில் சிறு கட்டிகள் இருப்பது போன்று இருக்கும்.
Comments
Post a Comment