வைட்டமின் டி

 🔯#வைட்டமின்_டி_உங்களுக்கு 

#வேண்டுமா……❓


🔯#வாரத்துக்கு_மூன்று_நாள்_20_நிமிடம் #வெயிலில்_நிற்க_வேண்டும்❗❗❓❓


❗❗வைட்டமின் டி ​அறிகுறிகளும் விளைவுகளும்❗❗


❓❓குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்❓❓


☀ உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’ 


இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பூமத்தியரேகைக்கு அருகில் வாழ்வதால், அதிகமாகவே கிடைக்கிறது.


வெயில். அதிலும் பெரும்பாலான மாதங்களில் வெயில் நிலவுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல், பலரும் இந்தச் சத்து தொடர்பான பல நோய்களுக்கு ஆளாகும் நிலை என்பது சற்று முரணாகத்தான் தோன்றுகிறது. 

இது ஒரு பக்கம் என்றால்……


👉`நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில்  வைட்டமின் டி இருக்கிறதா❓ 


👉`சாப்பிடும் பூரியில் வைட்டமின் டி இருக்கிறதா❓


என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்று, மற்றொரு பக்கம் கல்லாகட்டிக் கொண்டிருக்கின்றன. 


❓உண்மையில், சூரிய ஒளியிலிருந்து நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்குமா❓ 


❓அல்லது உணவின் மூலமே பெற முடியுமா...❓ 


 ❓இந்தக் குறைபாடு அதிகரிக்க என்ன  காரணம்... ❓


❓இதன் அளவு நம் உடலில் இருக்கவேண்டிய அளவைவிடக் குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்..❓ 


"வைட்டமின் 'டி'-யை நமது உடல் சூரிய ஒளியின் உதவியோடு உற்பத்தி செய்துகொள்கிறது.  சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலின் சருமப்பகுதியில் படுகின்றன. அப்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, இது உற்பத்தி செய்யப்படுகிறது.


பால் பொருள்கள், மீன், முட்டை, இறைச்சி, வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் மூலம்தான் அதிகமாக இச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது. இதன் பற்றாக்குறை முன்பைவிட அதிகரிக்கக் காரணம், நம் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டதுதான். குறிப்பாக, #வெயில்படாமலேயே வாழ்வதுதான். 


☀ இன்றைக்கும் பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. வைட்டமின் டி கிடைப்பதற்காக இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள்.


🇨🇭 #நன்மைகள்...❓❗


⬆எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். 


⬆நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். 


⬆உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 


⬆எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். 


⬆குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 


⬆வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும்.  


⬆தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். 


⬆சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். 


⬆மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. 


⬆ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். 


⬆திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.


🔴 #அறிகுறிகள்...❓❓❓


👉உடலில் 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே வைட்டமின் டி குறைபாடு என்கிறோம். 


▶முதுகுவலி, 


▶தசைவலி, 


▶உடல் வலி, 


▶காரணமே இல்லாமல் உடல் சோர்வு 


▶சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும்


போன்ற பிரச்சனைகள் இருக்கும். 

என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். 


இவற்றை அலட்சியப்படுத்தும் போது எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.


🔴 #குறைபாடை_நிவர்த்தி #செய்யாவிட்டால்……… 


◀`ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். 


◀வைட்டமின் டி போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். 


◀வயிறு உப்புசம். 


◀எலும்புகள் வலுவிழந்துவிடும்.  


◀பற்கள்,  நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். 


◀பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், 


◀சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், 


◀முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் 


◀எலும்பு அழற்சி, 


◀எலும்பு புரை 


போன்றவை ஏற்படும்.எலும்பு சார்ந்த நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு, சிலருக்கு அதிகப்படியான குறைபாடு உண்டாகும் போது……… 


⬅ முடக்குவாதம், 


⬅ நுரையீரல் 


பிரச்சனைகளும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


🇨🇭 #தீர்வுகள்❓❗


`சுமார் 600 யூனிட் (International Unit s- IUs) முதல் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் தேவை’ என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வயது, உடல் எடையைப் பொறுத்து இதன் தேவை மாறுபடும். 


குறைந்தபட்சம்  வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப்படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது. உங்கள் குழந்தை வெளியில் போய், வெயில் படும்படியாக விளையாடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மேலைநாடுகளைப்போல, உணவுகளில் இந்த சத்தைச் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.


வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின் டி யை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். 


வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இந்தச் சத்து நிறைந்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

 


⭕ வைட்டமின் டி உணவு


சால்மன்,முட்டையின் மஞ்சள் கரு

சீஸ்,டூனா கொழுப்பு நிறைந்த மீன்

சில தானிய வகைகள்,காட்டு காளான்கள், ஆரஞ்சு சாறு, சீஸ், தயிர், 

சோயா, டோஃபு, பால், பாதாம், சோயா, 

தேங்காய் பால், ஓட்ஸ்


💊 ​#சூரிய_ஒளி


வைட்டமின் டி உள்ள உணவு வகைகள் எல்லாமே உங்களுக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடு க்க கூடியதுதான். ஆனால் பைசா செலவில்லாமல் தேவைக்கேற்ப வைட்டமின் டி சத்து தருவது சூரிய ஒளி மட்டுமே. பிள்ளைகள் வளரும் போதே அவர்களை சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் வளர்ப் பதை தவிர்த்து திறந்த வெளியில் விளையாட அனுமதியுங்கள். தினமும் காலை 10 .30 மணி முதல் 12 மணிக்குண்டான நேரத்தில் பத்துநிமிடங்களாவது உடலில் வெயில்பட அனுமதியுங்கள்.


அதிக சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்த வேண்டாம்.சூரிய ஒளியும் கூடவே வைட்டமின் டி நிறைந்த உணவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 


💊#பால்


தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் பால் குடிப்பது அவசியம் என்கிறார்கள். பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறது.


பால் பொருள்களில் யோகர்ட் தினமும் சேர்த்து வரலாம். செயற்கை இனிப்புகள் கலந்து வெளியில் விற்கப்படும் யோகர்ட்டை வாங்காமல் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.


💊#மஷ்ரூம்


உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது. அடிக்கடி இதை க்ரேவியாகவோ, பிரியாணியில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


💊#சால்மன்_மீன்


அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் உணவை அதிகம் விரும்புவார்கள். மீன் விரும்பும் பிரியர்கள் உண வில் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது. வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது.


ஆய்வு ஒன்று கூறும்போது இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக கூறுகிறது. மற்ற மீன்களை காட்டிலும் இந்த மீனில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கிறது என்பதால் அசைவம் உண்பவர்கள் இனி சால்மன் மீனை தேடி சாப்பிடுங்கள்.


💊​#ஆரஞ்சு_சாறு


ஆரஞ்சு பழச்சாறு புளிப்பும் இனிப்பும் நிறைந்த இந்த ருசிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதால் இதை தினமும் எடுத்துகொள்ளலாம். தினமும் காலை உணவோடு ஒரு தம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள்.இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால் வளர்ந்த நாடுகள் இதை வலியுறுத்துகின்றன. சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும் இதற்கு மாற்றாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு நாளுக்கு வேண்டிய சத்தை கொடுத்துவிடும்.


💊​#முட்டை


மீன் வாசனையே பிடிக்காதே என்றும் சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கு இந்த முட்டையின் மஞ் சள் கரு ஓரளவு பலனளிக்கவே செய்யும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. சூரிய ஒளி படாமல் ஹார்மோன் ஊசிகள் உதவியால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் இந்த வைட்டமின்களை எதிர்பார்க்கமுடியாது. நாட்டு கோழிகள் வெயி லில் அலைந்து திரிந்து திறந்த வெளியில் வளரும் கோழிகளிடமிருந்து பெறும் முட்டைகளை எடுத்துகொள்வது நிச்சயம் பலனளிக்கும்.


💊​#ஓட்ஸ்


தானியங்கள் எப்போதுமே உடலுக்கு சத்துகளை அளிப்பவையே. அந்த வகையில் ஓட்ஸ் உணவு வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவு. இது உடல் ஆரோக் கியத்தையும் அதிகரிக்கிறது. வாரம் மூன்று நாள் காலை உணவாக ஓட் மீல் எடுத்துகொள்வது உங்களுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி அளவை ஓரளவு கொடுக்கும்.


💊#மீன்_எண்ணெய்.


காட் லிவர் எண்ணெய்யில் வைட்டமின் டி நிறையவே உள்ளது, ஒமேகா 3  கொழுப்பு  அமிலங்களும் நிறைந்து உள்ளன.அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெரியவர்களுக்கு  அஸ்டியோபொரோசிஸ் ஏற்படாமல் தடுக்க உதவும். 


🇨🇭 வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகளும் விளைவுகளும் கண்டிப்பாக அதிகப்படியான உபாதைகளையே ஏற்படுத்தும். இயற்கையை தவிர்க்க முற்பட்டதால் தான் வெப்பமிகுந்த நாட்டில் வாழும் போதே எளிதாக கிடைக்க கூடிய இந்த வைட்டமினை இழந்து குறைபாட்டோடு வாழ்கிறோம். இனியாவது இந்த குறைபாடு நேரமால் பார்த்துகொள்வோம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி