இதயம் பலம் பெற

 *                இதய நோய்கள் நீங்க 

 இதயம் பலம் பெற இயற்கை வைத்தியம்


 தேவையான பொருட்கள்

அதிமதுரம் 

அமுக்குறா 

கீழாநெல்லி 

கரிசலாங்கண்ணி

மலை வேம்பு இலை


  இவைகளை ஓரளவாக பொடி செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் சுடுநீரில் கலந்து பருகி வர ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து விடும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி ரத்தம் சுத்தமடையும் மேலும் இச்சூரணத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் விலகும்


இன்னொரு முறை

தேவையான பொருட்கள்


                      அருகம்புல் 50 கிராம்

                       அகத்திப்பூ 50 கிராம்

                     அரச இலை 50 கிராம்

           அம்மன் பச்சரிசி 50 கிராம்

                                   சீரகம் 5 கிராம்

                                  மிளகு 5 கிராம்

                                    ஓமம் 5 கிராம்


  இவைகளை அளவுகளின்படி பொடிசெய்து ஒன்றாக கலந்து இதில் ஒரு ஸ்பூன் காலை மாலை இரண்டு வேளையும் பசும்பாலுடன் கலந்து பருகி வர உயர் ரத்த அழுத்தம் சீராகும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு நீங்கும் உடல் எடை குறையும் இதயம் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகி இதயம் பலம் பெறும் 


இதய நோய்கள் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வைத்திய முறைகள்


அரச மரத்து இலை கொழுந்துடன் அதிமதுரம் சமமாக சேர்த்து இதை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கி இதயம் பலம் பெறும்


நீலி என்ற அவுரி இலையுடன் சம அளவாக அருகம்புல்லை சேர்த்தரைத்து இதில் ஒரு நெல்லிக்காயளவு எடுத்து இதை சுடுநீரில் கலந்து  தினந்தோறும் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் படிப்படியாக நாற்பது நாட்களில் குறைந்து விடும் இதயத்திற்கு பலம் உண்டாகும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்


இதயநோய் நீங்க 

  மலர் மருத்துவம்


அகத்தி பூ 

தாமரை பூ

ஆவாரம் பூ

செம்பருத்திப் பூ

பன்னீர் ரோஜா பூ

  

  இவைகளுடன் ஏலரிசி மற்றும் ஓரிதழ் தாமரையும் சேர்த்து அனைத்தையும் ஒரே அளவாக பொடி செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து பால் அல்லது வெந்நீருடன் கலந்து காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் தீரும் நெஞ்சு வலியை குணமாக்கும் 


  மாரடைப்பு நிகழாமல் வாழ்நாட்களை வளமாக வாழ இது உதவும் மேலும் உயர் ரத்த அழுத்தத்தை நீக்கி இதயம் நல்ல முறையில் இயங்க இந்த வைத்தியம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் 


                    சித்தர்களின் சீடன் 

              பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி