சர்க்கரை நோய் தீர்வு

 *                       சர்க்கரை நோயும் 

       சமநிலைப்படுத்தும் வைத்தியமும்


  நெல்லிக்காய் வற்றல் விரலிமஞ்சள் இரண்டையும் சமமாக சூரணம் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்கும்


மேலும் சர்க்கரை நோயால் வருகின்ற பாதிப்புகள் விலகும் வெகு மூத்திரம் எனும் சிறுநீர் அதிகமாக போவது குணமாகும் சிறுநீரகங்கள் பலம் பெறும்


கொட்டைக்கரந்தை வெள்ளறுகு சிறுசெருப்படை இவை மூன்றையும் உலர்த்தி சமமாக சூரணம் செய்து இதன் மொத்த எடைக்கு சமமாக சீனி சர்க்கரை இதனோடு சேர்த்து இருந்து நாட்கள் காலை மாலை இரண்டு வேளையும் மூன்று கிராம் அளவு எடுத்து இதை ஆறவைத்த சுடுநீரில் கலந்து பருகி வர சர்க்கரை நோயால் ஏற்படும் சகல உபத்திரமும் சாதாரணமாக தீர்ந்துவிடும்


சர்க்கரை நோயால் ஏற்படும் மூத்திரத்தை குணமாக்க ஒரு எளிய வைத்தியம்


    நாவல் கொட்டை பொடியுடன் பொரித்த படிகார பொடியை சமமாக கலந்து இதை தினம் இருவேளை மூன்று கிராம் அளவு தண்ணீரில் கலந்து பருகிவர சர்க்கரை நோயின் பாதிப்பால் ஏற்பட்ட 

வெகுமூத்திரம் எனும் அதிகமான சிறுநீர் போக்கு வெகு எளிதாக குணமாகும்


சர்க்கரை நோயால் ஏற்பட்ட 

                 உடல் வறட்சி நீங்க


தேவையான பொருள்கள்

சீரகம்

வால் மிளகு 

வரக்கொத்தமல்லி 

பனங் கற்கண்டு


   இவைகளை சமமாக சூரணம் செய்து காலை மாலை இருவேளையும் பதினைந்து நாட்கள் தொடர்ந்து 

பசுவெண்ணெயில் குழைத்து  சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணியும்


மேக கங்கை என சொல்லப்படுகின்ற நீரிழிவு நோயால் ஏற்படும் உடல் எரிச்சல் நீங்கும்  சிறுநீர் எரிச்சல் குணமாகும் 


உப்பு புளி காரத்தைக் குறைத்து பத்தியத்துடன் இந்த வைத்திய முறையைக் கடைபிடித்து வந்தால் பெண்களின் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும் ஆண்களுக்கு நீர்த்த விந்து கெட்டிப்படும்


சர்க்கரை நோயால் ஏற்படும் 

உடல் அழுக்கும் உடல் நாற்றமும் நீங்க


மிளகு 

மஞ்சள்

கடுக்காய்

கோரைக்கிழங்கு 


   இவைகளை சூரணம் செய்து காலை மாலை இருவேளையும் தேன் அல்லது வெந்நீரில் கலந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலிமை உண்டாகும் உடல் அழுக்குகள் நீங்கும் உடல் நாற்றம் விலகும் உடலில் நறுமணம் வீசும்


சர்க்கரை நோயால் ஏற்பட்ட

           உடல்  பலவீனம் நீங்க


மலைவேம்பு எனும் மலை வேப்பனிலையை இடித்து சூரணம் செய்து இதை இருவேளையும் தொடர்ந்து மூன்று கிராம் அளவில் பதினைந்து நாட்கள்  சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து நீர்த்த விந்து கெட்டிப்பட்டு உடலுக்கு அழகை ஏற்படுத்தி சர்க்கரை நோயின் அளவை சரிவிகிதத்தில் வைத்திருக்க உதவும்


சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எளிய வைத்தியங்கள்


  தேற்றான் விதை பொடியும் வில்வ இலை பொடியும் சமமாக கலந்து உப்பு புளி காரத்தைக் குறைத்து ஏழுநாட்கள் காலை மாலை இருவேளையும் தொடர்ந்து உண்டு வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் சர்க்கரையின் அளவு சரிவிகிதத்தில் இருக்கும் 


ஆவாரை இலைப் பொடியுடன் சமமாக நிலாவரை பொடியை கலந்து இதை தினம் இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட வெகு மூத்திர நோய் குணமாகும் மலச்சிக்கல் நீங்கும் எப்பொழுதும் சர்க்கரையின் அளவு உயராமல் கட்டுப்பாட்டில் இருக்கும்


                      சித்தர்களின் சீடன் 

                பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி