பித்தப்பை பாதுகாக்க

 பித்தப்பையில் கற்கள் உருவாவது ஏன்???


பொதுவாக நாம் உண்ணும் உணவை சமிபாடடைய செய்ய பல நொதியங்கள் சுரக்கும். நாவில் இருந்து ஆரம்பித்து மண்ணீரல், கணையம், இரைப்பை மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புக்கள் நொதியங்களை சுரக்கும். இந்த நொதியங்கள் தான் உணவிலுள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ள ஏதுவான அமிலங்களாக மாற்றி வினையாற்றுகின்றன.


இதில் பித்தப்பையில் சுரக்கும் bile என்ற நொதியமானது பித்த நிலையில் தான் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அவை கற்களாக மாறுகின்றன. அது ஏன்?


பித்தப்பை கல் தோன்ற காரணம் உடல் பருமன், கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக உண்ணுதல், மாவு உணவுகளை அதிகமாக உண்ணல், உடற்பயிற்சி இன்மை, ஆரோக்கியமற்ற கடை உணவுகள், செயற்கை உப்புடன் கூடிய உணவுகள், நொறுக்கு தீனிகள், நேரம் பிந்தி உறங்குதல்,நேரம் பிந்தி உண்ணுதல் போன்றனவையாகும்.


இப்படியான நிலையில் பித்தப்பை கல் உருவாகினால் மருத்துவர்கள் பித்தைப்பையையே அகற்றி விடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து தொழிற்பட தான் உருவாகியுள்ளது. தேவையில்லை என்று ஒன்றை அகற்றி விட்டால் அதன் பாதிப்பு வேறு விதமாக இருக்கும். அதாவது பித்தப்பை இல்லாமல் உடலானது கொழுப்பை சக்தியாக மாற்ற பெரும் பாடு படும். அத்துடன் மலச்சிக்கல், வயிற்றோற்றம், மஞ்சள் காமாலை, நார் சத்து உள்ள உணவுகளை உண்ண முடியாமை போன்ற பல சிக்கல்கள் வாழ்நாள் தோறும் தோன்றும்.


பித்தப்பையை பாதுகாப்பது எப்படி?


நார் சத்து கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை அதிகமாக உண்ணல் வேண்டும்.

உணவை நேரத்துக்கு உண்ண வேண்டும்.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை அவசியம் பேணல் வேண்டும்.

பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை குறைப்பதற்காக உணவுகளை தவிர்த்தல் கூடாது.

போதியளவு நீர் அருந்த வேண்டும்.

கொழுப்பு கூடிய உணவுகளை மட்டுப்படுத்த வேண்டும்.

மாவு சத்துக்கள் கூடிய அரிசி, கோதுமை உணவுகளை அளவோடு உண்ணல் வேண்டும்.

மைதா உணவுகளை தவிர்த்தல் அவசியம்.

நொறுக்கு தீனிகள், கடையில் விற்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தல் அவசியம்.

நேரத்துக்கு உறங்குவதும், நேரத்துக்கு விழிப்பதுவும் மிக அவசியம்

சோபாவில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் வேண்டாம்.

ஒரு நேரம் நடைப்பயிற்சி, ஒரு நேரம் உடற்பயிற்சி அல்லது யோகா என தினமும் இரண்டு வேளை செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உண்ணல் வேண்டும்.

அநியாயமாக உறுப்புக்களை இழக்காது அவற்றை முறையாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு உறுப்பும் மிக அவசியம்.


வாழ்க நலமுடன்!


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி