ஈரலில் கொழுப்பின் அளவு குறைய
ஈரல் கொழுப்பு ( Fatty Liver ) குறைய கசாயம்
மது போன்ற போதைப் பழக்கங்கள் உள்ளவர்ளுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த கல்லீரல் கொழுப்பு படிமானம்
இப்போது முறையான வாழ்வியலைக் கடைப்பிடித்து வருபவர்களுக்கும் கொழுப்பு படிந்த ஈரல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது
இதற்கு உணவுப் பழக்க மாறுபாடுகள் உடற்பயிற்சி இன்மை சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருக்காமை போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணிகள் கூறப் படுகின்றன
ஈரலில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் எளிய வீட்டு மருந்து இது
பசி இன்மை சீரணம் இன்மை ருசி இன்மை மலச்சிக்கல் போக்கும் அருமருந்து
கசாயமாக
வறுத்த துவரம்பருப்பு ............ மூன்று கிராம்
கறிவேப்பிலை தூள் ...மூன்று கிராம்
சுக்கு தூள் ................ மூன்று கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும் நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி
கல் உப்பு ........ஒரு சிட்டிகை மட்டும்
சேர்த்து ஒரு வேளை மருந்தாகக் குடிக்க வேண்டும்
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு மருத்துவ ஆய்வு செய்து பார்க்க ஈரலின் நிலை நன்கு மேம்பட்டு ஆரோக்கியம் அடைந்து இருப்பதை உணர முடியும்
அல்லது சூரணமாக
வறுத்த துவரம்பருப்பு ............ ஐம்பது கிராம்
கறிவேப்பிலை தூள் .... ஐம்பது கிராம்
சுக்கு தூள் ................ ஐம்பது கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக்
கலந்து வைத்துக் கொண்டு உணவு சாப்பிடும்போது ஒரு சிட்டிகை மட்டும் கல் உப்பு சேர்த்து சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்
அல்லது இட்லி தோசைக்கு பொடியாகவும் பயன்படுத்தி நலம் அடையலாம்
அல்லது
இந்த சூரணத்தை வெந்நீரில் கலந்து தினமும் இரண்டு மூன்று வேளைகள் குடிக்கலாம்
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும்
இதை ஒரு மருந்தாக அல்ல உணவாகப்பயன்படுத்தி ஈரல் நோய்களில் இருந்து விடுபட்டு நலமுடன் வாழலாம்
Comments
Post a Comment