காரீயம் செயல்பாடுகள்

 காரீயம் என்ற உலோகம்


உடல் மிகவும் விசித்திரமானது. மனிதனின் உடல் மட்டும் அல்ல, அணைத்து உயிர்களின் செயல்பாடுகளும் இன்னும் முழு அளவில் தெரியவில்லை. 


உடல் என்பது இயற்கையின் ஒரு பகுதி. அதாவது ஒரு தூசி என்று எடுத்துக்கொள்ளலாம். இயற்கையின் பகுதி என்பதால், இயற்கையில் உள்ள அனைத்தும் உடலில் இருக்கும். 


உடல் என்பது நீர், காற்று மற்றும் மண் சார்ந்தது. இந்த மண் என்று வரும்போதே, உலோகங்களும் அடங்கும். நமது உடலில் பல உலோகங்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றன. இரும்பு, தாமிரம் போன்றவை - இவை உடலில் ரத்தத்தில், எலும்பில் மற்றும் நரம்பில் - உள் உறுப்புகளில் இருக்கின்றன. உண்ணும் உணவில் இருந்து உலோகங்களை தேவையான அளவு உடல் கிரகித்துக்கொள்ளுகிறது. இவை கல்லீரலில் சேர்த்து வைக்கப்படும். கல்லீரல் உடலின் godown மாதிரி. உலோகம் என்றாலும் சில உலோகங்களை உடல் ஏற்றுகொள்ளுவது இல்லை. காரீயம் உடலுக்கு தீங்கு செய்யும் உலோகம். இது உணவில் இருந்து பெரும் பட்சத்தில், உடல் அதை நிராகரித்து விடும். நிராகரிக்கப்பட்ட காரீயம், வியர்வை, மலம், மூத்திரம் - என்ற கழிவுகள் மூலம் வெளியேறிவிடுகிறது. 

இந்த காரீயம் விஷத்தன்மை கொண்டது. உணவில் அது உற்பத்தியாகிறது என்பதை உணரும் போதே மூளை அதை தடுத்து நிறுத்திவிடும். 


ஆனால், வேறு வகையில் காரீயம் உடலில் சென்று கொண்டிருக்கிறது. 

சிறிய கடைகளில் தேநீர் குடிக்கும்போது, வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்தித்தாள்கள் மேல் வைத்து  தருவார்கள். இதே மாதிரி சில சமயங்களில், கோவில் திருவிழாக்களில், பிரசாதம் இதே மாதிரி தரப்படுகிறது. செய்தி தாள்களில் உள்ள எழுத்துக்களில் காரீயம் அதிக அளவில் இருக்கிறது. 


இன்னும் கொடூரம். சிலர் செய்தி தாள்களை கிழித்து வடையிலுள்ள எண்ணெயை பிழிந்து விடுவார்கள். எண்ணெய் வெளியேறி விடுகிறது. காரீயம் உள்ளே சென்று விடுகிறது. ஒரே நாளில் நடப்பது இல்லை. சிறிது சிறிதாக வயிற்றுக்குள் சென்று, இரத்தத்தில் கலந்து விடுகிறது. 

இந்த செய்தித்தாள்கள் பிழியும் பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காரியத்தை உடலில் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் கழிந்து இதன் பாதிப்பு தெரிய வரும். இது தான் எலும்பில் வலி போன்ற பல உபாதைகளை கொண்டு வருகின்றன. 

ஒரு நிலையில் நமது உடலின் கோடௌன் - கல்லீரல் பாதிக்கப்பட்டு விடும். 

ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும்; அதுவும் அதை சுத்தமான பாத்திரத்தில் வைத்து உண்ணவேண்டும். வாழை இலை போன்றவை நூறு சதவீதம் சுத்தமானது.

உடல் நலன் காப்போம். 

---:::   :::---

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி