கோடையில் அதிக குளிர்்்பானம் வேண்டாம்

 🔯 #கோடையில்_வெயில்……


🔯 #பயமுறுத்தும்

#கூல்ட்ரிங்ஸ்கள்_எதற்கு❓❓❗❗


❌  மனித உடலுக்குத் தண்ணீரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது. 


💦 தினசரி உபயோகத்துக்குத் தண்ணீர் உடலுக்குத் தேவை. 


💦 ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் நாற்பது மில்லி லிட்டர் தண்ணீர் தேவை. 


💦 ஒருவரின் எடை அறுபது கிலோ என்றால் 2.4 லிட்டர் தண்ணீர் வேண்டும். 


☀ கோடையில் இருபத்தைந்து சதவீதம் அதிகம் தேவை. அதனால் தண்ணீரைக் குடியுங்கள்.


☀ கோடையில் வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, முன் நெற்றித் தோல் கறுப்பாகிவிடும். சோற்றுக்கற்றாழை மடலினுள் (நொங்கு) போன்றிருக்கும் சதைப்பற்றால், பாதிப்புற்ற இடத்தைக் கழுவி வர கருமை நிறம் மறையும். 


☀ வெயிலில் சென்று வந்தால் வரும் தலைவலி சிலருக்கு வாழ்நாள் பிரச்சினை. 'சுக்கு, மல்லி காபி' இத்தலைவலிக்கு உகந்த மருந்து.


🍎  #நீர்ச்சத்து_அதிகமுள்ள_பழவகைகள்

#எவை_எவை_தெரியுமா❓


வெள்ளரி - 95%


தர்பூசணி - 98%


பால் - 90%


ஆப்பிள் - 85%


திராட்சை - 81%


ஆரஞ்சு - 87%


வாழைப்பழம் - 75%


அதனால் கோடைக் காலத்தில் இவைகளை நிறைய சாப்பிடுங்கள்.


🍎 #கர்ப்பிணி_பெண்ணா❓


☀ கோடையுடன் வாந்தியினாலும் நீரிழப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. கருப்பை சிறுநீர் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வீர்கள். மாதுளை பழச்சாறில் சிறிது தேன் அல்லது பனைவெல்லம் கலந்து தினசரி சாப்பிடுங்கள். நீரிழப்பையும் தவிர்க்கலாம். வாந்தி உணர்வுக்கும் நல்ல மருந்து. மாதுளையின் இரும்புச்சத்து இன்னும் உதவிடும் உங்களுக்கு.


💦 உடலில் நீர்ச்சத்து ஒரு சதவீதம் குறையும் போதே தாகம் தவிக்கத் தொடங்கி விடும். பத்து சதவீதம் குறைந்தால் தசை இறுக்கம், ஊரல், பலஹீனம் ஏற்படும். பதினோறு சதவீதத்துக்கு மேல் குறைந்தால் சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கும். நீர்ச்சத்து இருபது சதவீதம் குறைந்தால் மரணம் நிச்சயம். எனவே தாகம் எடுக்காமல் இருந்தால் கூட அவ்வப்போது தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு 'நா வறட்சி' கோடையில் மேலும் அதிகமாகும். அதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொண்டு உமிழ்நீரைப்பருக 'நா வறட்சி' மறையும்.


அதிக வேர்வையில் தோலின் வெளிப்புறம் பூஞ்சை பெருகும். அக்குள் பகுதியில் அரிப்பையும், தேமலையும் உருவாக்கிவிடும். இவற்றை ஒழிக்க சோப்புக்குப் பதிலாக நலுங்குமாவைத் தேய்த்துக் குளித்துவர பூஞ்சை மறையும்.


☀ கோடையில் '#மெட்ராஸ்_ஐ' பிரபல விருந்தாளி படுவேகமாகப் பரவும். இதிலிருந்து கண்ணைப் பாதுகாக்க நத்தியாவட்டை பூவை கண்ணில் வைத்து அழுத்துவதும், இளநீரில் கண்களைக் கழுவுவதும் நல்லது.


☀ கோடையில் வரும் '#சன்_ஸ்ட்ரோக்'  மரணத்தைக் கூட நிகழ்த்திவிடும். 


⏩ தோல் வியர்க்காது இருத்தல்,


◀ படபடப்பு, 


◀ தலைவலி, 


◀ தலை சுற்றல், 


◀ குமட்டல், 


◀ குழப்பமனம், 


◀ மயக்கம் 


ஆகியவை சன் ஸ்ட்ரோக்கிற்கான அடையாளங்கள்.


சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி தோலில் ஏற்படும் கோடைக் காயங்கள் (sun burns) முதுமையில் தோல் புற்று நோய்க்கு வழிவகுக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜாக்கிரதை.


வயிற்றுப் போக்கும், வாய்ப்புண்ணும் கோடையில் அதிகம் அவதியளிக்கும் விஷயங்கள். வயிற்றுக் குடலினுள் குடியிருக்கும் நன்மையளிக்கும் நுண்ணுயிரியான (லேக்டோபஸிலிஸ்) குறைவதே இதற்குக் காரணம். மோரில் இந்த நுண்ணுயிரி நிறைய இருக்கிறது. மோர் குடிக்க 'No More' வாய்ப்புண்.


காபி, மதுபானம் அதிக சர்க்கரை ஆகியவற்றை கோடையில் தவிர்ப்பது நல்லது. இவை உடலில் நீர்ச்சத்தை வேகமாக இழக்கச் செய்யும்.


கோடையில் கிடைக்கும் வடுமாங்காய் வாய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் நல்லது. அதிலிருக்கும் மெல்லிய துவர்ப்புத்தன்மை அனைவருக்கும் நல்லது. ஜீரணத்தைத் துரிதப்படுத்தி பசி உண்டாக்கும். வடுமாங்காய் கோடையில் உங்கள் 'மெனு'வில் தினசரி இருக்கட்டும்.


இளநீர், இயற்கை அளிக்கும் கோடைக்கான சத்துமிக்க 'மினரல் வாட்டர்'. சோடியம், மக்னீசியம், கால்ஷியம் சேர்ந்த பாக்டீரியா இல்லாத தொண்ணூற்று ஒன்பது சதவீத நீர்ச்சத்துள்ள பானம். இதிலுள்ள லாரிக் அமிலச் சத்து இளநீருக்கு அடுத்து தாய்ப்பாலில் மட்டும்தான் அதிகம் உண்டு.


வியர்க்குருவின் பிறப்பே பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான். சூரியக் கதிர்கள் தோலில் தொடர்ந்து தாக்குவதால் ஏற்படும் எழுச்சிகள் தான் இது. பன்னீர், சந்தனம், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால் வியர்க்குரு மறையும்.


வறுத்த, பொரித்த, கோழிக்கறி, போன்ற உணவு வகைகளை கோடையில் தவிர்த்துவிடுங்கள். மீனும்  நல்லது. வெயிலின் உக்கிரத்தில் 'அம்மை' நோய் அவதி அதிகம் வரும். அம்மை வராமல் தடுத்துக்கொள்ள வாரம் இருநாள் #வேப்பம்பூ_ரசம் சாப்பிடுங்கள். 


மிகுந்த குளிர் பானங்களை கோடையில் தவிர்க்க வேண்டும். அதிக குளிர்தன்மை கொண்ட இவை வயிற்று வலியை உண்டாக்கும். 


ஒரு நாளைக்கு அறுநூறு கிலோ கலோரி உடல் செயல்திறனைப் பெற, ஒரு லிட்டர் வியர்வையை வெளியேற்றுகிறோம் என்பது தெரியுமா❓ உங்களுக்கு❓


👉 வியர்க்குருவின் தீவிர வளர்ச்சியே 'வேனல் கட்டிகள்' சீழ்க் கட்டிகளாக மாறிவிடும். கட்டி நன்கு பழுத்துவிட்டால்…… 


சுட்ட மஞ்சள் பொடி போட்டு விளக்கெண்ணெய் தடவி வெற்றிலையில் மேல் பூச்சாக ஒட்டிவிடலாம் கட்டி உடைந்து சீழ் வெளியேறி கட்டி ஆறிவிடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி