கோரைக்கிழங்கு
கோரைக்கிழங்கு – மருத்துவ பயன்கள்:
♻️கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும், வியர்வையை அதிகமாக்கும்,உடல் வெப்பத்தை அகற்றும்,உடல் பலமுண்டாகும்,வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்,மாதவிடாயை தூண்டும், குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது.
♻️கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கோரைக்கிழங்கை முத்தக்காசு என்றும் அழைக்கின்றனர்.
♻️கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.
♻️கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.
♻️இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்
♻️கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்.
♻️பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
♻️கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.
Comments
Post a Comment