இரத்தம் சுத்தமாக

 *           அனைத்து நோய்களும் நீங்க   

                  ஆரோக்கியம் உண்டாக

     சித்தர்கள் அருளிய சிறந்த மருந்துகள்


    ஒரு மண் பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு நெல்லிக்காய் சாறு இஞ்சி சாறு இவைகளை சம அளவாக விட்டு இதில் சீரகத்தை ஊறப் போட்டு இந்த பானையை ஒரு வெள்ளைத் துணியால் வேடுகட்டி வெயிலில் வைத்து உலர்த்தி உலர்ந்த பின் இதை சூரணம் செய்து தினந்தோறும் சாப்பாட்டிற்கு பின்னால் மூன்று கிராம் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும் உடலிலுள்ள அனைத்து நோய்களும் விலகும்


  ரத்த சோகை மற்றும் பித்த மயக்கம் வெகு எளிதாக நீங்கும் உடல் தளர்வுகளை நீக்கி உடல் நடுக்கத்தை குணப்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்தினால் வருகின்ற தலை கிறுகிறுப்பு குணமாகும்


இன்னொரு முறை


                            வில்வ வேர் பொடி 

                                கடுக்காய் பொடி 

      நெய்யில் வறுத்துப் பொடித்த 

                 கருவேலம் பிசின் பொடி


  இவை மூன்றையும் சம அளவாக எடுத்து ஏழுதரம் நல்ல தண்ணீரில் அலசி எடுத்த கற்றாழையின் சாற்றை விட்டு அரைத்து


      பட்டாணி அளவில் சிறு சிறு உருண்டைகளாக செய்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு இதை ஒரு மண்டலம்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் விலகும்


சாப்பிட வேண்டிய முறை


  இதில் இரண்டு உருண்டைகளை எடுத்து இதே அளவு இதனோடு பனைவெல்லம் சேர்த்து இவைகளை நன்றாக அரைத்து பொடி செய்து சுடுநீரில் கலந்து காலை மாலை இருவேளை தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத குணத்தின் மாறுபாட்டால் உடலில் தோன்றிய அனைத்து நோய்களும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


அடுத்து


  இதில் இரண்டு உருண்டைகளை பொடி செய்து இதை நெய்யில் குழைத்து பதினைந்து  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த குணத்தின் மாறுபாட்டால் உடலில் ஏற்பட்ட அனைத்து நோய்களும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


அடுத்து


  இரண்டு உருண்டைகளை பொடி செய்து இதைத் தேனுடன் கலந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர சிலேத்தும குணத்தின் மாறுபாட்டால் உடலில் ஏற்பட்ட அனைத்து நோய்களும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


                       சித்தர்களின் சீடன் 

               பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்