மசாஜ் தைலம்
* உடல் வலிகளை உடனே நீக்கும்
மசாஜ் தைலம்
தேவையான பொருள்கள்
நல்லெண்ணெய் 500 மில்லி
கருஞ்சீரகம் 60 கிராம்
வெள்ளைப் பூண்டு 10 கிராம்
செய்முறை
கருஞ்சீரகத்தை பொடியாக செய்து நல்லெண்ணெயில் கலந்து நுரை அடங்கும் வரை லேசான தீயில் காய்ச்சி மெழுகு பதத்திற்கு எண்ணெய் வந்ததும் பூண்டை அரைத்து எண்ணெயில் கலந்து கொதி வரும்படி காய்ச்சி கொள்ள வேண்டும்
பயன்படுத்தும் முறை
தேவையான அளவு இந்த எண்ணையை எடுத்து லேசாக சுடவைத்து உடலில் ஏற்படுகின்ற அனைத்து வலிகளுக்கும் மேல்பூச்சாக தடவி வர உடல் வலிகள் அனைத்தும் உடனே நீங்கும்
குறிப்பாக இடுப்பு வலி மூட்டு வலி
பாரிச வாயுவால் ஏற்படும் கை கால் வலிகள் மேலும் கை கால் மரத்துப் போதல் போன்ற குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்
கழுத்து வலி தோள்பட்டை வலி நரம்பு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் இந்த எண்ணெயை தடவி வந்தால் வலிகள் முழுமையாக நீங்கிவிடும்
இந்தத் தைலத்தை இரண்டு ஸ்பூன் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் உள்ளுக்குச் சாப்பிட்டால் வயிற்று நோய்கள் வாய்வு தொந்தரவுகள் நீங்கும் சர்க்கரைநோயால் வரும் உடல் பாதிப்புகள் விலகும் கை கால் மறுத்தல் குணமாகும் கல்லீரல் வலிமை பெறும்
இந்த தைலத்தை பூண்டு சேர்க்காமல் காய்ச்சி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நிற்கும் நரை ஏற்படாமல் தடுக்கும் தலையில் வழுக்கை விழாமல் பாதுகாக்கும்
இதே எண்ணையை ஆண்குறி மீது வெளிப் பிரயோகமாக இரவில் தடவி வந்தால் ஆண் உறுப்பு வலிமை அடையும்
தோல்நோய்களை நீக்கும்
அருகம்புல் தைலம்
உலர்ந்த அருகம்புல் வேர் 50 கிராம் நல்லெண்ணெய் அரை லிட்டர் இவைகளை ஒன்றாக கலந்து சிறு தீயில் தைலமாக காய்ச்சி கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பாதிப்புகள் எதுவும் வராது
தோல் சுருக்கம் விழாது
தோல் பளபளப்பாக இருக்கும்
தேகம் அழகாக தோன்றும்
கண் எரிச்சல் மற்றும் உடல் எரிச்சல் நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்
சொரி சிரங்கு படை போன்ற சரும நோய்கள் உடலில் தோன்றாத வண்ணம் நம்மை இது பாதுகாக்கும்
அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கட்டாயமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு தைலம் இது
சித்தர்களின் சீடன்
பிரம்மஸ்ரீ இராமலிங்கம்
Comments
Post a Comment