மூலிகை துவையல்
* தீராத நோய்களுக்கு தீர்வு
உணவே மருந்து
வழக்கமாக உண்ணும் உணவு முறையை
மாற்றி அமைப்போம்
வரும் பிணிகளை வராமல் தடுப்போம்
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய இயற்கை முறை உணவு வைத்தியம்
நாயுருவி இலை துவையல்
நாயுருவி இலை ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை இரண்டும் சேர்ந்து ஒரு கைப்பிடி இதனோடு நோய் எதிர்ப்பு சக்திக்காக மிளகு சீரகம் சிறிது சேர்த்து சுவைக்காக இந்துப்பு கொஞ்சம் இதனோடு கலந்து
இவை அனைத்தையும் (எண்ணையில் வதக்காமல்) பச்சையாக மிக்ஸியில் அரைத்து இதை இட்லி தோசைக்கு அல்லது சாப்பாட்டிற்கும் துவையலாக பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம்
கிடைக்கின்ற மருத்துவ பயன்கள்
வாயில் இருந்து மலவாய் வரை உள்ள அனைத்து உடல் சார்ந்த நோய்களையும் நீக்கி செரிமான பாதிப்புகளை நிவர்த்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு இயற்கையான உணவு இது
கல்லீரல் பாதிப்பு குணமாக கரிசலாங்கண்ணி இலை துவையல்
மேலே சொன்ன நாயுருவி இலை துவையல் முறைப்படி நாயுருவி இலைக்கு பதிலாக கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து மேற்கூறியபடி துவையல் செய்து இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் மேலும் கல்லீரல் பலம் பெறும் கல்லீரல் சார்ந்த நோய்கள் எதுவும் எப்போதும் வராது
ஏனெனில் கல்லீரலின் வலிமைக்கும் கரிசலாங்கண்ணி மிகவும் சிறந்த ஒரு உணவாகும்
கரிசலாங்கண்ணியை ஏதாவது ஒரு வகையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் உடலுக்கு தோன்றாது இதுவே நிஜம்
நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்
கற்றாழை குழம்பு
இரண்டு பெரிய கற்றாழை மடலில் உட்புற சோறை எடுத்து இதை ஏழு முறை நல்ல தண்ணீர் விட்டு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுரக்காய் சாம்பார் செய்வதை போல சுரக்காய்க்கு பதிலாக கற்றாழை சோறு சேர்த்து இதை பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பாட்டில் ஊற்றி சாப்பிட்டு வரலாம்
கற்றாழையை உணவாக செய்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் மலச்சிக்கலை நீக்கும் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆண்மை சக்தி அதிகரிக்கும்
கற்றாழை குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும் மேலும் வெப்பத்தை தணிக்கும் உடலுக்கு நோய் வருவதை தடுத்து நிறுத்தும்
கடுமையான வெயில் காலத்திலும் கற்றாழை மடல்கள் வாடாமல் வளரும்
அதைப்போல உடலில் எவ்வளவு வெப்பம் இருந்தாலும் சோற்றுக் கற்றாழையை சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தை தணித்து உடலில் தோல் சுருக்கம் வராமல் காக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு
மேலும் இது உடலை அழகாக வைத்திருக்கவும் உதவும்
சுருங்கச்சொன்னால்
நோயில்லாமல் வாழ இளமையை நீட்டித்துக் கொள்ள கற்றாழை ஒன்றே போதும்
நோயில்லாமல் வாழ அனைவரும் சாப்பிட வேண்டிய ஆவாரம் பூ கூட்டு
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம்பூ இதே அளவு பாசிப்பயிறு இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து இதனோடு சுவைக்காக சிறிது இந்துப்பு சேர்த்து இதை நன்றாக கடைந்து கூட்டு போல செய்து சாப்பாட்டில் சாம்பாருக்கு பதிலாக இதை ஊற்றி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இதனால் வலிமை பெறும்
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் ஆவாரைப் பூவுக்கு தீராத நோய் எதுவும் உடலில் இல்லை என சொல்லலாம்
ஆவாரம் பூவை தினந்தோறும் கஷாயமாகவோ அல்லது பொடியாக செய்தோ அல்லது துவையல் அரைத்தோ ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம் அவ்வளவு பெருமை வாய்ந்தது ஆவாரம்பூ
ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு நீங்கும் கல்லீரல் பலப்படும்
இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டாயமாக வராது இது உண்மை
மேலே சொன்ன உணவு முறைகளை கையாண்டால் பரம்பரையாக வருகின்ற நோய்கள் எதுவும் உடலில் தோன்றாது
சித்தர்களின் சீடன்
பிரம்மஸ்ரீ இராமலிங்கம்
Comments
Post a Comment