வேளக்கீரை
வேளைக்கீரையின் மருத்துவ குணங்கள்:
வயிற்றுப் புழு:
வேளைக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மூன்று மிளகு சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புழுக்கள் ஒழியும்.
பசி எடுக்க:
வேளைக்கீரையுடன் மஞ்சள் சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
வாத நோய்:
வேளைக்கீரை, வாதநாராயணன் கீரை, மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். தினமும் இதனை ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குணமாகும்.
கல்லீரல் வீக்கம்:
வேளைக்கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனை தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
நெஞ்சு வலி:
வேளைக்கீரை, தாமரை பூ இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் நெஞ்சுவலி உடனே சரியாகும்.
காது வலி:
காது வலியால் அவதிப்படுபவர்கள் வேளைக்கீரையின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி குணமாகும்.
வாயுக்கோளறு:
10 கிராம் வேளைக்கீரையுடன் 5 கிராம் ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வாயுக்கோளாறு குணமாகும்.
Comments
Post a Comment